பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570

வரலாறு:

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை வெண்பா) "நறுமாந் தளிர்மேனி நாளுறாப் பிள்ளை உறுமாறு கொள்ளின் வருந்தும் - பெறுமாறு வெண்ணெய் உருக்கு நறுநெய் கொடுத்தேனும் எண்ணெய்கொண் டப்புந் தலை

எனவும்,

66

99

என்னை நீ காயல் எரிகதிரோய் ! யான்பயந்த பொன்னங் கழலான்பின் போகிய - மின்னைக் கருதலரே யாகிக் கருணனைக்கொன் றிட்ட பருதிவேற் பாண்டவரைக் காய்”

எனவும்,

6

“செய்துமோ பாண ! திருவி லுடனேந்திப் பொய்தீர் நெடுந்தேர் *புரிதக - மெய்யே பலமுறை யாலிரவென் மாமகிழார் சோரர் குலமுறையாற் செற்றான் குறை

எனவும்,

وو

இவை வை *பொய்கைக் கதயானை சூழாசிரியர் பாடியன. அவர் வைத்த *விரதமாவது.

(நேரிசை வெண்பா)

1“தேருடைத்தாய்க் *கற்பாய்த் திணைமருதாய்த் திண்மரம் ஓரடியுட் பத்துடன் ஒற்றுப்பேர்த் - தேருடைய பண்பாவு தொல்சீர் மறமன்னர் தன்முன்னால்

வெண்பா உரைப்பான் கவி”

எனவும் வரும். பிறவும் அன்ன.

ஒரு பொருட்பாட்டாவது, ஒன்றனையே வருணித்துப் பாடுவது.

(பா. வே) *புகுதக, புகுதுக. *சென்றான். *பொய்கைக் கதத்த யானைச் சூழாசிரியர்.

  • வாதமாவது.

1. தேர் (விடத்தேர்) உடை, தாய் (வாழை) கல் (கல்லாலமரம்) பாய் (பாய்மரம்) இத்தி (இச்சி) இணைமருது (கருமருது, வெண்மருது; புல்லைமருது என்பதும் அது) ஆய் (ஆச்சா) திண்மரம் (கருங்காலி) என்னும் பத்து மரப் பெயர்கள் இவ்வடிக்கண் அடங்கியிருத்த லறிக. 'பொற்புடைய மாதர்’ ‘ஓரடியுட் பத்து' எனத் தொடங்கும் செய்யுட்களையும் (தண்டி. 98. உரை மேற்) அவற்றின் உரையையும் இதனுடன் ஒப்பு நோக்குக. (பா. வே) *காமர்.