பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

பிணக்கும் எழுத்தொன்று போர்த்துரைத்தால் என்னாம்? மணத்தின் பெயர்வதுவை யாம்’

எனக் கொள்க. பிறவும் அன்ன.

575

“சார்ந்த எழுத்து வருத்தனம்' என்று சொன்னவதனால், முன்னம் ஒரு சொல்லேயாய்ப் பின்னை முறையானே ஒரோ எழுத்து ஏறச் சொல்லப்படுவனவும் ‘எழுத்து வருத்தனம்’ எனப்படும். அவை 'வந்த வழிக் கண்டு கொள்க.

“மற்றும் வடநூற் கடலுள்

ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி

விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டே”

என்பது, “ஆரியம் என்னும் பாரிரும்பௌவத்துக் காட்டிய அக்கரச் சுதகமும், மாத்திரைச் சுதகமும், பிந்து மதியும் பிரேளிகையும் முதலாகவுடையனவும், இப்பெற்றியே தமிழாகச் சொல்லும் மிறைக் கவிகளும் அறிந்து கொள்க,' என்றவாறு.

அவற்றுட் சில வருமாறு:

(நேரிசை வெண்பா)

“நெற்பெயர தொன்றை நிறுவிக் கடைநீக்க நற்பயத்தி னாற்கால தொன்றாகும் ; - மற்றதன்

ஈற்றெழுத்து நீக்க இயல்புடைய நூற்செய்கை

பாற்படத் தோன்றும் பயின்று”

இஃது 2அக்கரச் சுதகம்; ‘ எழுத்துச் சுருக்கம்’ எனவும் அமையும்.

வரலாறு:

பாலாவி, பாலா, பா.

எனக் கொள்க.

(குறள் வெண்பா)

க. “வாம மணிமே கலையார் மயிர்குறுகின்

ஆமவர் பெய்யும் அணி”

எனவும்,

66

உ. "வண்ணத்தின் ஒன்றோதி மாத்திரையிற் குன்றுமேல்

எனவும்,

1.

-~

கண்ணன் உமிழ்ந்த பொருள்

மாறன். 278 உரையும், எடுத்துக் காட்டுக நோக்குக.

2.

அக்கரம்

எழுத்து. சுதகம் - அழிவு. இவண் அழிந்தபின் உண்டாகிய சுருக்கத்தை உரைத்து நின்றது.