பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“உறுபுகழ் மரபின் உயர்ந்தோர் கூறிய அறுவகை மரபின ஆனந் தம்மே

66

அவைதாம்,

இயனெறி திரிந்த எழுத்தா னந்தமும் சொன்னெறி வழீஇய சொல்லா னந்தமும் புகழ்ச்சிநிலை திரிந்த பொருளா னந்தமும் யாப்புநிலை திரிந்த யாப்பா னந்தமும் தூக்குநெறி திரிந்த தூக்கா னந்தமும் தொடைநெறி திரிந்த தொடையா னந்தமும் நடையறி புலவர் நாடினர் இவையே

அவற்றுள்

எழுத்தானந்தமாவது,

பாடப்படுவோன்

பெயரைச் சார்த்தி எழுத்து அளபெழப் பாடுவது.

என்னை?

"இயற்பெயர் சார்த்தி எழுத்தள பெழினே

இயற்பா டில்லா எழுத்தா னந்தம்

என்றாராகலின்.

- யா. வி. 4. மேற்.

வரலாறு:

(நேரிசை வெண்பா)

"ஆழி யிழைப்பப் பகல்போம்; இரவரின்

தோழி துணையாத் துயர்தீரும் ; -வாழி

நறுமாலை தாராய் திரையவோஒ வென்னும் செறுமாலை சென்றடையும் போது”

- யா. வி. 4. மேற். து பொய்கையார் வாக்கு. இதனுள் ‘திரையவோஒ' என் இயற்பெயர் சார்த்தி எழுத்தளபெழுந்தமையான், எழுத்தானந்தம்.

என்புழி

சொல்லானந்தமாவது, இயற்பெயர் மருங்கின் மங்கலம் அழியத் தொழிற்சொல் பாட்டுடைத் தலைமகன்மேல் ஏறப் பாடுவது.

66

என்னை?

'இயற்பெயர் மருங்கின் மங்கலம் அழியத் தொழிற்பெயர் புணர்ப்பினது சொல்லா னந்தம்"

என்றாராகலின்.

- யா. வி. 4. மேற்.

வரலாறு:

(நேரிசை வெண்பா)

“என்னிற் பொலிந்த திவண்முகம் என்றெண்ணித் தன்னிற் குறைபடுப்பான் தண்மதியம் - மின்னி