பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590

66

என்னை?

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

முதற்றொடை மருங்கின் மொழிநிறுத் தொருபெயர் இடைப்படுத் தவ்வழி *இடுங்குசீர்ப் படினே வாய்ப்ப நோக்கி வல்லோர் கூறிய

யாப்பா னந்தமென் றறைதல் வேண்டும்'

என்றாராகலின்.

(அகத்தியனார் ஆனந்த ஓத்து)

வரலாறு:

(கட்டளைக் கலித்துறை)

ஊகத்தி னான்மல்கு சோலை 'யுளிய னுயர்வரைவாய் மேகத்தி னாலுமின் னாலு மிகவு மெலிந்திளைத்த ஆகத்தி னேற்கரு ளாயென் பணியுமை வாயெயிற்று நாகத்தி னான்மால் கடைந்திடப் பட்ட நளிகடலே!

எனக் கொள்க.

(அகத்தியனார் ஆனந்த ஓத்து)

தூக்கானந்தமாவது, கஞ்சத் தாளம் முதலிய கருவி களோடும் இசைந்த இசைக்கீழ்ப் பாடுதற்கண், அவன் பெயரைச் சார்த்தி, உயரவும் இறுகவும் பெயர் பிளந்து பண்ணியும், ஒருவர்க்கும் பெயர் புலனாகாமையும் சொல்லுதல்.

66

என்னை?

தாழா மரபினர் யாழொடு புணர்ந்த

பாவகை ஒருவனைப் பாடுங் காலைத்

தொல்வகை மரபின் அவன்பெயர் தோற்றி

ஏங்கினும் இடுங்கினும் எழுந்துபிரிந் திசைப்பினும்

தூங்கினும் குழறினும் தூக்கா னந்தம்” (அகத்தியனார் ஆனந்த ஓத்து) என்றாராகலின்.

அவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் கண்டுகொள்க.

தொடையானந்தமாவது, அளபெடைத் தொடைப் பாட்டினுட் பாட்டுடைத் தலைவன் பெயர் சார்த்தி அள பெடுப்பத் தொடுப்பது,

66

என்னை?

அளபெடை மருங்கிற் பாடப் படுவோன்

பெயரொடு தொடுப்பிற் பெற்றியில் வழுவாத்

99

தொடையா னந்தம் எனவே துணிக (அகத்தியனார் ஆனந்த ஓத்து) என்றாராகலின்.

1. இதில் உளியன் என்பது பாட்டுடைத் தலைவன் பெயர்.

(பா. வே) *இடுஞ்சீர், இருசீர். *அறியல். *மெலிந்துரைத்து.