பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இனி, மாபுராணமுடையார் கூறுமாறு: விகாரமாத்திரை யாகிய உயிரள பெடையும், 'கால் மாத்திரையாகிய ஒற்றும் பாட்டுடைத் தலைமகன் பெயருக்கும் அவன் பெயர்க்கு அடையாகிய சொற்கண்ணும் புணர்ப்பிற் குற்றம் என்றார்.

என்னை?

66

கழிநெடில் அசையும் காலெழுத் தசையும்

பெயரயற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர்”

என்பவாகலின்.

அவர் காட்டும் உதாரணம்:

(குறள் வெண்பா)

“மன்னும் வழுதி வருமருங்கு நின்றாளென்

றின்னும் உரைக்குமிவ் வூர்’

- யா. வி. 2. மேற்.

என்பதனுள், விகார மாத்திரையாகிய கால் மாத்திரையாய் மகர ஒற்று பெயர் அருகு வரலின், வழு.

66

(குறள் வெண்பா)

வாஅம் புரவி வழுதியோ டெம்மிடைத் தோஒம் நுவலுமிவ் வூர்”

யை

என்பதனுள் ; விகார மாத்திரையாகிய உயிரளபெடை ‘வழுதி’ என்னும் பெயர்க்கு அடையாகிய புரவிக்குப் புணர்த்தலின், வழு

இனி, சையானந்தம் ஒன்று. அஃதாவது, அவல முற்றிருந்தோர்க்கு இசையாகிய பஞ்சமமும்,. குறிஞ்சியும், பியந்தையும். பாலையாழும், காந்தார பஞ்சமமும், இவற் றொடு பியந்தை யாழும், தலைவனைப் புகழ்ந்த பாட பாட்டிற்கும் இசையாகி வரப் புணர்ப்பது ‘இசையானந்தம்’ எனப்படும்.

என்னை?

“சிறையழி துயரொடு சிந்தையிற் பிரிந்த கவலை கூர்ந்த கருணைக்குப் பெயரே அவலம் என்ப அறிந்திசி னோரே'

66

அவலம் என்பதற் கிசையெனப் படுவது

குறிஞ்சி புறநிலை பியந்தை யென்றா

ாண்

1.

கால் மாத்திரை யாகிய ஒற்று மகரக் குறுக்கம் ; ஆய்தக் குறுக்கமும் ஆம்.