பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594

20.

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஏழுடை இருபான் ஊனம் நீக்குபு பாட வல்லோன் கவிஞன் ; அன்றேல், அடங்காப் புதல்வற் பயந்த பரத்தையிற்

புறஞ்சொற் பெறூஉம் புலவ ரானே

எனக் கொள்க.

இனி, செய்யுளாவன:

“செய்யு டாமே மெய்யுற விரிப்பின்

99

தனிநிலைச் செய்யுள் தொடர்நிலைச் செய்யுள் அடிபல தொடுத்த தனிப்பாச் செய்யுள்

உரையிடை மிடைந்த பாட்டுடைச் செய்யுள் இசைநுவல் மரபின் இயன்ற செய்யுள்

நயநிலை மருங்கின் சாதியொடு தொகைஇ அவையென மொழிப அறிந்திசி னோரே”

என்று ஓதப்பட்டனவெல்லாம் அணியியலுட் காண்க. இனி, ‘விளம்பனத்தியற்கையும்' என்பது:

“விளம்பனத் தியற்கை விரிக்குங் காலை

ஆரியம் தமிழொடு நேரிதின் அடக்கிய உலகின் தோற்றமும் ஊழி இறுதியும் வகைசால் தொண்ணூற் றறுவர தியற்கையும் வேத நாவின் வேதியர் ஒழுக்கமும் ஆதி காலத் தரசர் செய்கையும் அவ்வந் நாட்டார் அறியும் வகையால்

ஆடியும் பாடியும் அறிவரக் கிளத்தல்”

எனக் கொள்க.

வீரசோழியம் 179 மேற்.

இனி, 'நரம்பின விகற்பமும்' என்பது:'நரம்பு எழு வகைய: சூரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என.

66

என்னை?

'இளிகுரல் துத்தம் நான்கு மாத்திரை;

விளரி கைக்கிளை மூன்றே யாகும்;

தாரம் உழையிரண் டாகத் தகுமே’”

என்றாராகலின்.

1. சிலப்பதிகாரம் 8: 31-32. அரும்பத.