பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

601

ன்னும் அவ்விதப்பான் உயர்திணையும் அஃறிணையும் ஆமாறு உரைத்தும்:

“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே;

அஃறிணை என்மனார் அவரல பிறவே; ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே

- தொல். சொல். 1.

6

எனவும்,

“மக்கட் சுட்டே உயர்திணை யாகும்”

எனவும்,

தேவரும் நரகரும் மேவவும் பெறுமே"

எனவும்,

“ஏவிய இம்மூன் றன்றி ஒழிந்தவை

யாவகைப் பொருளும் அஃறிணை யாகும்

எனவும் கொள்க.

இனி, ஒரு சாரார், ‘அகத்திணை, புறத்திணை, அகப் புறத்திணை என மூன்றாய் அடங்கும்,' என்ப. ஆமாறு அவிநயத்துட் காண்க.

66

இனி, இருதுவாவன:

'காரே கூதிர் முன்பனி, பின்பனி

சீரிள வேனில் வேனில் என்றாங் கிருமூ வகைய பருவம்; அவைதாம் ஆவணி முதலா இவ்விரண் டாக

மேவின திங்கள் எண்ணினர் கொளலே'

இந்த இருது வருணனை அணியியலுட் காண்க.

று

இனி, காலம் மூவகைய: இறந்த காலம், நிகழ் காலம், எதிர்

காலம் என. என்னை?

என்

“இறந்ததும் நிகழ்வதும் எதிர்வதும் என்னும்

திறந்தெரி வுடையன கால மாகும்”

றாராகலின். அன்றியும், நன்னர்க் காலம், நற்காலம்; தீந்த காலம், தீக்காலம்; நற்றீக்காலம், தீத்தீக் காலம் என இவையுமாம்.