பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பைசாசமாவது, துஞ்சினாரோடும், மயங்கினாரோடும், களித் தாரோடும், செத்தாரோடும், விலங்கினோடும் இழிதகு மரபில் யாருமில்லா ஒரு சிறைக்கண் புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம்.

என்னை?

(நேரிசை வெண்பா)

66

துஞ்சல் களித்தல் மயங்குதல் மாழாத்தல் அஞ்சல் அறிவழிதல் சாதலென் - றெஞ்சினவும் இன்ன திறத்தான் இழிதக வெய்துபவேல் பின்னைப் பிசாசமணப் பேர்”

எனவும்,

66

குணத்தி னிழிந்த மயங்கியவ ரோடும்

பிணத்தினும் விலங்கினும்பிணைவது பிசாசம்”

எனவும் சொன்னாராகலின்.

6

கந்தருவமாவது, ஒத்த குலனும் குணனும் அழகும் அறிவும் பருவமும் உடையார், யாருமில் ஒருசிறைக்கண் அன்பு மீதூரத் தாமே புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம்.

66

என்னை?

(நேரிசை வெண்பா)

ஒத்த குலத்தார் தமியராய் ஓரிடத்துத் தத்தமிற் கண்டதம் அன்பினால் - உய்த்திட 'அந்தரம் இன்றிப் புணர்வ ததுவரோ கந்தருவம் என்ற கருத்து'

எனவும்,

66

'முற்செய் வினையது முறையா உண்மையின்

ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து

காட்சி ஐயம் தெரிதல் தேற்றலென நான்கிறந் தவட்கு நாணும் மடனும் அச்சமும் பயிர்ப்பும் அவற்கும் உயிர்த்தகத் தடக்கிய

அறிவும் நிறையும் ஓர்ப்பும் தேற்றமும் மறைய அவர்க்கு மாண்டதோர் இடத்தில் மெய்யுறு வகையுமுள் எல்ல துடம்படாத்

1.

வேறுபாடு இன்றி.