பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.’ கலைக்களஞ்சியம்

87

வேடத்தையும் சிவன் கோயிலையும் முதல்வன் எனவே கண்டு வழிபடுவன்.

11. காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்

காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்

அயரா அன்பின் அரன்கழல் செலுமே

12. செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும்

ஆலயந் தானும் அரனெனத் தொழுமே.

மெய்கண்டாரும் சிவஞானபோதமும் என்னும் இந் நூலால், மெய்கண்டார் வரலாற்றை அறியச் செய்வதுடன் சிவஞான பாடியத்தை எளிதில் கற்றுணரச் செய்யும் வகையையும் கொள்கிறார் கா. சு. இவற்றுடன், பொழிப்புரை, கருத்துரை, குறிப்புரை இன்னன தாமே வரைந்து. மிக எளிமைப்படுத்தவும் முயன்றுள்ளார். ஒரு நூல் கற்பார் நிலைக்கேற்ப, எவ்வெவ் வகையான் எல்லாம் உரை காண்டு பயன்படல் வேண்டும் என்பதற்குச் சான்றாக இந்நூல் அமைகின்றது. சிவஞான போதச் சூர்ணிக்' கொத்து, சிவஞான போதம் பற்றிப் பிற்காலத்தவர் செய்த செய்யுள்கள், திருவெண்ணெய் நல்லூரின் பெருமை இன்னவாகிய பின் முன் இணைப்புகள் ஓராய்வு தொடர்பான தொடர்பாய்வுக்குப் பெரிதும் உதவுவனவாம்.