பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

97

கா. சு. இயற்றிய வரலாறு ஆய்வு நூல்களுள் எல்லாம் மேற்கோள் செய்யுள்கள் மிகுதியாகக் கொண்டது இந்நூலே என்பது தெளிவாகின்றது. 'இதுவே முதலாக வெளி வந்துளது’ என அவர் கூறுவதால் இதன் வெளிப்பாட்டுப் பயன் தந்த பட்டறிவால் வரவர மேற்கோள் செய்திகளை உரைநடை யாக்கமாக்கும் போக்கை அவர்க்கு ஊட்டியது எனலாம்.

தாயுமான அடிகளைப் பரவிப்போற்றி உலக நலம் விளைத்த பெருமக்களைச் சிந்தித்துத் தாயுமான அடிகளின் தகவைத் திரட்டி வைக்கிறார் கா. சு.

“உலகம் யாவும் போற்றும் ஒரு முதல்வனின் விரிந்த பொதுத் தன்மைகளை இன்சுவை ததும்பும் அமுதப் பாடல்கள் வாயிலாக அறிவுறுத்திய பாவலரும் உயர்ந்த பேரின்ப நிலை ஒன்றினையே விழைந்து செல்லும் உயிரினியல்பைத் தம் நிலை கூறுமுகத்தாற் பன்னிய பெரியாரும், மனமாயையின நுட்ப முரைத்த மூதறிவாளரும் தாயுமான அடிகள் என்னும் சிவானு பூதிப் பெருஞ் செல்வரே ஆவர்.’

66

‘அவர் எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணி இரங்கும் அருளொழுக்கத்தை உலகினர்க்குரைப்பதில் ஒப்பற்ற ஆர்வ முடையவர். தாழ்வெனும் தன்மையில் தலை சான்றவர். உலகினார் யாவரும் மெய்ந்நெறி கடைப் பிடித்து அகண்டாகார சிவத்தைத் துய்க்கும் வண்ணம் கூவுங் கருணை முகிலனைய பேரறிவாளர்” என்பது அது.

ஏறக்குறை நானூறு ஆண்டுகளுக்கு முன் திருமறைக் காட்டிலே கேடிலியப்ப பிள்ளை என்பார், இறைவன் திருத்தளி அறத்தலைவராக விளங்கினார். அவர்தம் தலைமகனார் சிவசிதம்பரம் என்பார். கேடிலியப்பர் தம் தமையனார்க்கு மகப்பேறின்மையால் சிவசிதம்பரம் மகவுரிமையால் சென்றார். அதன்பின்னர்க். கேடிலியப்பர்க்குத் தாயுமான பெருமான் அருளால் தோன்றிய புதல்வர் தாயுமானவர்.

நாயக்கமன்னர் வரிசையில் எட்டாம் மன்னன் முத்துக்

கிருட்டிண நாயக்கர் ஒருநாள் திருமறைக் காட்டுத் திருக்கோயில் வழிபாட்டுக்கு வர, அக்கோயில் ஒழுங்கும் சிறப்பும் அவரைக் கவர அறங்காவலராக விளங்கிய கேடிலியப்பரைப் பாராட்டித் தம் அரசில் பெருங்கணக்கர் என்னும் பதவியருளினார். அம்மன்னனுக்குப் பின்வந்த முத்து வீரப்ப நாயக்கர் என்பார் காலத்தும் அப்பதவி தொடர்ந்தது.