பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

103

தண்ணிய சந்தன மணங் கலந்த காற்றானது முற்றத்தில் உலாவுவது போல நல்ல மாதங்கள் உலாவக் கண்டு மகிழும் வசதியமைந்த காலத்தும்,

வெண்ணிற மிக்க முழுமதி பட்டப் பகல் போல நிலவு வீசுதலைக் கண்டு இன்புறுங் காலத்தும்,

விண்ணவர் பெற்ற கடலமுதம் போன்ற அறுசுவையுணவு கொண்டு இன்புறுங் காலத்தும்,

நறுமணமாலை வாசனைப் பொருள்கள் வெற்றிலை பாக்கு முதலிய விரும்பின யாவும் விரும்பிய அளவு நுகர்ந்து பலவகை விளையாட்டுகளில் பொழுது போக்கி இனிது துயின்றாலும், எக்காலத்தும் நின்னருளை மறவா வரந்தந்து அடியேனைக் காத்தருள்வாய்' என்பது அது.