பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

109

கவர்ந்து கொண்ட இடை என்பதால், அஃதில்லை என்னும் பொருள் தரும் நயத்தைக் குறிக்கிறார்.

நண்டு தன் வளையின் வாயிலை அடைப்பது கருமிகள் தம் வாயிற் கதவை அடைத்தாற் போல்வது என்பதை “வச்சை, மாக்களெனவே முடஅலவன் வளைவாய் அடைக்கும் மழை நாளே' என வரும் காசிக் கலம்பகத்தைக் காட்டி நயக்கிறார்.

சிவபெருமான் செஞ்சடை தீயொக்கும். கொன்றைப் பூ எரியில் இட்ட இ ட பொன்போலும்; அப் பூவைச் சூழும் வண்டுகள் கரித்துண்டுகள் போல்வன; கங்கை, அப்பொன்னைப் பணி யாக்குவதைப் பார்க்கும் பெண்ணொருத்தி போலும். வெண் பிறை பொற்பணி செய்யும் கிழத் தன்மையாற் கூனுற்ற கொல்லனை ஒக்கும் எனத் திருவாரூர் நான்மணிமாலையில் வரும் தொடர் உருவகத்தைக் குறித்து இன்புறுகிறார்.

பிற்கால இலக்கிய முறைக்குத் தக உயர்வு நவிற்சியை இயற்கை அளவிற்கு மிகை படக் கையாண்டுள்ளமையையும் இப்பகுதியில் சுட்டுகிறார். ஒருத்தி அழுத விழிநீர் முந்நீரை உவர் நீராக்கிற்று. (மீனா. பின். 17)

"சோலையிலுள்ள தென்னை மரங்கள் வளர்ந்தோங்கி விண்ணவர் கோமான் கொலுவிருக்குமிடத்தே நடனமிடும் மயிலினம் போன்ற மாதர்க்கு இளவேனிற் களைப்பு தீரும்படி, செலவிள நீர்க் குலைகள் கொடுத்தன. கமுக மரங்கள் பழக்க மாகிய பவளமுடன் பூவாகிய முத்துக்களும் சேர்ந்து தமது தோகையினால் அந்நங்கையர்க்குக் கவரி வீசின. (மு. கு. பி. த. 25)

66

வாளை மீனானது கருக்கொண்ட முகில் வயிற்றைத் தாக்கி ஊடுருவிச் சென்று கற்பகக் காட்டைக் கடந்து வான கங்கையில் நீந்தி மதிமுயலைத் தடவி விண்மீன் கூட்டத்தைக் கடந்து பெரும்புறக் கடற் சுறா மீனொடு விளையாடும்.(மீ. பி. த. 2)

66 வயை வானளாவப் பெருகியமையால் கதிரோன் அந்நதித் தோணி போன்றது. திங்கள் கைத்தோணியும், விண் மீன்கள் சிறுமிதப்புகளும் போன்றன (மீ. பி. த. 57).

கா.சு.

ன்னன பல காட்டுகிறார் கா. சு. இயல்பு உவமைகள். நூற்கதை உவமைகள் இன்னனவும் அடிகளார் பாடலில் பயின்று வருதலைச் சுட்டுகிறார்.