பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

115

கருதவில்லை போலும்" என்றும் "குல நலத்தினும் கல்வி நலனே சிறந்ததென்பதற்குத் தமிழ்ச் சங்கத்தாரை வென்ற திருவள்ளுவர் கதையை முனிவர் எடுத்தியம்பினமையால் திருவள்ளுவர் தாழ் குலத்தவரென்பது அவர் கருத்துப் பாலும் என்றும் இன்னவாறு முனிவரர் கூறும் சான்று கொண்டு அவருளத்தைத் தெளிவார் கா. சு.

"கேள்விக்குச் சிறந்த உதாரணம் கண்ணப்பரே; அது பெரும் பயன் விளைத்தல் கண்ணப்பர் வரலாற்றிற் காணப் படுதல் போலப் பிற யாண்டுமில்லை” என்று பாராட்டுகிறார்.

“இற்றைக் காலத்து ஆராய்ச்சியாளர் இராவணன் வட நாட்டரசருடன் போர் புரிவதற்குத் தொடங்குங்கால், பசுநிரை கவர்தல் போலக் காட்டில் இருந்த பெண்ணைச் சிறை செய்தனனே யன்றிக் காமங் காரணமாகச் சீதையைக் கவர வில்லை” என்பர் என்றும்,“வீடணன், பகைவர்பாற் செல்லுதற்குக் காரணம் இராவணன் அவைத் தழுவிக் கொள்ளாமையாம் என்பது முனிவர் கருத்தாதலின் அதனைச் சுற்றம் தழுவாமைக்குக் காட்டு ஆக்கினர். தம்பி தமையனை நீங்கிச் சென்றதனையே இக் காலத்தார் குறை கூறுவர். முற்காலத்திற்கேற்ப இராவணன் பாலுள்ள குறையையே ஆசிரியர் குறித்தனர்” என்றும் ஆய்வாளர் உரைகல் கொண்டும் கூறுகின்றார்.

·

கதையை எடுத்துக்காட்டாமல் நூல் உண்மையை எடுத்துக் காட்டலையும் அரிதாக மேற்கொள்ளுதலை,

“தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது தூயபிற வாமையொன்றே சோமேசா ஆயதனால் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்”

என்பதால் காட்டி, “கருப்பையில் வாழும் உயிர்க்கு முற் பிறவிகளின் நினைவு உண்டென்றும் அது பற்றிப் பிறவாமையை வேண்டும் என்றும் சூதசங்கியை ஓதுகின்றது” என்கிறார்.

"கல்வியும் நற்பயனுடையதாக வேண்டுமாகலின் காமச் சுவையை மிகுதி விளைக்கும் சிந்தாமணி முதலிய நூல்களைப் பலகாலும் பயிறல் தீதாதலின் ‘சேக்கிழார் சிந்தாமணிப் பயிற்சி தீதெனவே, தூக்கி உபதேசித்தார்' என்றார். அதனை ஒருகாற் பயின்று அதன் செவ்வியுணர்தல் குற்றமன்று. பயிலுதலே தவறென்றவாறாம். ஏனெனில் இங்ஙனங் கூறிய முனிவரே சிந்தாமணி முழுதுங் கற்றவர்தான். அவர் அதன்கண் நின்று