பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

135

ஏகம்பவாணன் தனக்கு நன்றி செய்த ஏகன் என்பவன் பெயரை முதலிலும், தகப்பன் பெயராகிய வாணன் என்பதை இறுதியிலும், தனது ஆசிரியராகிய கம்பர் பெயரை நடுவிலும் வைத்துத் தன் பெயரை அழைத்துக் கொண்டான் என்ப பாணன் ஒருவனுக்குப் பாண்டிய அரசு கொடுத்ததாகவும் கூறுப என்பது பெயராய்வுக் குறிப்பு. (கம்பர். 32).

இடத்துக்குத் தகப் பொருள் காணற் குறிப்பும் குறிப்புரைப் பகுதியில் உண்டு.

66

வாலி என்பது சொல்லளவில் இராமாயணத்திற் கூறப்படும் குரங்கின் தலைவனைக் குறித்தாலும், இந்த இடத்தில் துரியோதனனைக் குறிப்பதாகும். மூக்கரிதல் என்பது பொதுவான மானக்கேட்டை உணர்த்திற்று. கள் என்பது கடுப்பையும் உணர்த்தும். முதிர்ந்த கள்ளுக்குக் கடுப்புண்டு. (ஒட்ட20)

"செருப்புக்குத் தோல் வாங்கும்” என்பதற்கு செருப்பு தைப்பதற்காகத் தோல் வாங்கும் என்ற சாதாரண பொருளிருந்தாலும் இங்கே கூறிய பொருளே (யுத்தகளத்தில் போய் எதிரிகளின் யானைகளைத் தன் வசப்படுத்துகின்ற என்னும் பொருளே) பொருத்தமானது. அது ஒரு சொல்லழகு’ (ஒட்ட. 21) என்பன முதலிய இடங்களில் இடத்துக்குத் தகப் பொருள் காணற் சிறப்பு விளக்கப்படுகின்றது.

“முக்கண்ணன் என்றரனை” என்னும் பாடல் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய பாடல் வரிசையில் உள்ளது (3). அதனைக் காளமேகப் புலவர் பாடலெனக் கொண்டாரும் உளர் என்பதைக் குறிப்பிடுகிறார்.

குறிப்பு என்பதற்குப் பதில் கருத்து என்றும் கூறுகிறார்.

“கருத்து : நீர் போனால் என் உயிர் போமென்றாள்" இது இராம கவிராயர் பாடிய “நாமம் பெருஞ்செல்வம்” (4) என்னும் பாடற் கருத்தாகும்.

பசி மிகுந்த பின்னெல்லை என்னும் பாடலில் (பல வித்து. 351), “முன்கூறிய செயல்கள் வேண்டிய பயனைக் கொடாமை போல வாழ்நாள் எல்லாம் சும்மா இருந்து மரண காலத்தில் தருமஞ் செய்ய முயலுதல் உரிய பயனைத் தராது என்பது கருத்து” என்றும்;