பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

137

(குழந்தைத் தன்மையும்), பெண்ணுடைமையும், கனி (முதிர் தலும்), துன்பமும், இறப்பாகிய கேடும் இல்லை என்பது கருத்து’ என்பது அது.

இவ்வாறு நடுவெழுத்தலங்காரம் வருமிடங்களிலெல்லாம் வேண்டுமளவு சுருங்கிய குறிப்புரைகள் உண்டு. இரட்டுறல் எனப்படும் சிலேடை வருமிடங்களில் வருமிடங்களில் உரை தருவதுடன் அரிதாக இரட்டுறல் விளக்கமும் உண்டு. பொருள் கூற வேண்டிய தேவை இல்லாத இடங்களில், “இதற்குப் பொருள் வெளிப்படை' என்று உரைப் பகுதியை முற்றுவிக்கிறார். அவற்றுள் ஒன்று:

66

‘சக்கரவா கங்கிளியாந் தைநாரை யன்னங்க ரிக்குருவி கௌதாரி காடையன்றில் - கொக்கு குயில்கருடன் காக்கைபுறா கோழியிரா சாளி மயில்கழுகு கோட்டான்வௌ வால்’

பறவைப் பெயர்களை அடைமொழி ஒன்றும் இன்றி வெண்பா இலக்கணம் பொருந்தப் பாடிய பாடல் இஃதாதலால் வேறு பொருள் நோக்கு இல்லாமை கருதி வெளிப்படை எனப்பட்டதாம்.

இலக்கிய வரலாற்றுத் தேர்ச்சியும், புலவர் வரலாற்று ஆய்வு, நூலாய்வு, கால ஆய்வு ஆகியவற்றின் திறமும் ஒருங் கமைந்த கா. சு. வின் அத்திறங்கள் இத் தனிப்பாடல் தொகுப்பில் சிற்சில இடங்களில் அரிதாகவே ஒளி செய்கின்றன.