பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

139

இதழ் பெறுவார் இதழைப் பிரித்துத் தனித்தனியே சில நூல்களாக அட்டை கட்டி வைத்துக் கொள்ளும் நிலையில் தொடர் தலைப்புகளுக்குத் தனித்தனியே தொடர் பக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் வாசகர்க்குத் தனித்தனியே சில நூல்கள் கிடைப்பதுடன், நூல் ஆசிரியர்க்கும் சில நூல்கள் எழுதி முடித்த நிறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னோடி அமைப்பு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வெளி வந்த திங்கள் இதழாகிய ‘செந்தமிழ்' எனல் தகும். ஏனெனில், அவ்விதழ், இவ்விதழ் தொடங்குவதற்கு 32 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி இம்முறையை நடைமுறைப் படுத்தி வந்தது.

ஏறத்தாழ எட்டு அல்லது ஒன்பது படிவங்களில் (128 அல்லது 144 பக்கங்களில்) வெளிப்பட்டுள்ள மணிமாலை இதழ்கள் ஒவ்வொன்றிலும் 12 முதல் 16 பக்கங்கள் ஆங்கிலப் பகுதியாக உள்ளன. அது “Tamil Blooms” அதில் தமிழ்க்கலை, இலக்கியம், சமயம் பற்றியனவாகச் செய்திகள் விளங்கின.

புறநானூற்றுப் பாடல்கள் 1-8; 1:9 இதழ்களில் ஆங்கில ஆக்கமுற்றுத் தமிழ்ப் பாடல்களுடன் வெளி வந்துள. தொடரும்' என்னும் குறிப்பு இருந்தும் அதன் மேல் ஒரே பாடலுடன் நின்றுவிட்டது (1:10). ஆங்கில ஆக்கம் உரை நடையே! பாட்டன்று. நீதிநெறி விளக்க ஆங்கில ஆக்கமும் வெளிவந்துளது.

கா. சு. இயற்றிய அறிவு விளக்க வாசகம், இந்திய சட்டக் கோவை, உலகப் பெருமக்கள், வாழ்க்கை இன்பம், வானநூல், பழந்தமிழர் நாகரிகம், உடல் நூல் என்பன நூல் வடிவில் பல்வேறு காலங்களில் வெளி வந்தன எனினும், அவை மணி மாலைப் பொருளாகவும், மணிமாலைப் பொருள் நூலுரு வாகவும் கொண்டும் கொடுத்தும் சிறந்த வகை உணர வாய்க்கின்றது.

‘பொதுமறை' என்னும் தலைப்பில் திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பற்றிய ஆய்வு தொடக்க முதல் வெளி வந்துளது. அது நூல் உருவாக்கம் பெற வேண்டுவது.

'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்பதற்கு பொறிவாய் ல்லாமல் ஐந்து அவித்த ஐந்து அவித்த இறைவன் எனப் பொருள் ாருள் காண்கிறார். அவித்தான் என்பதற்கு இயற்கையாகவே அடக்கியவன் எனப் பொருள் கண்டு ‘புலனைந்தும் வென்றான்’ என்னும் தேவாரத்தைக் காட்டுகிறார்.