பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

நடத்துபவராய், படைஞராய்ப் பணி செய்தார். ஆயினும் நூற்காதலராக விளங்கினார்.

66

இன்று என்னை விலக்கியடிக்கிறீர்கள்; நான் தொடர்ந்து பேசத்தான் போகிறேன்; சில ஆண்டுகளுக்குள் மக்கள் என் பக்கம் இருப்பார்கள் உங்களைப் பின்பற்றுவார் எவரும் இரார்” என்று ஒரு பரபரப்பான கூட்டத்தில் பேசினார். பல தொல்லைகளுக்கு ஆட்பட்டார். பாசியர் என்னும் அமைப்பை உருவாக்கினார். அது பொதுவுடைமையை அழிக்க எழுந்த இயக்கம்; அரசியலைக் கைப்பற்றியது அவ்வியக்கம். “எல்லாம் அரசாங்கத்தைப் பொருத்திருக்கிறது. உள்ளமோ உடலோ அரசுக்கு வேறாக இருப்பின் பயனற்றன என்பதே அக்

கொள்கை.

""

முசோலினி இத்தாலியர்களுடைய உள்ள நோக்கத்தைச் சீர்திருத்தி அவர்கள் மனப்பான்மையை மாற்றியது போலப் பிறர் எவரும் செய்யவில்லை. இதனாலேயே சரித்திரத்தில் மிகப் பெரிய தலைவர்களுள் ஒருவராக அவர் இருத்தற் குரியவர் என்பது தெளியப்படும்" என்கிறார். கா. சு.

66

இரண்டாம் பாகத்தில் காந்தியடிகள் முந்து நிற்கிறார். “நாளடை வில் விரைவாகவாவது, மெதுவாகவாவது காந்தியடிகள் இன்னாரென்பது பற்றி உலகமானது மனத் தெளிவு அடைய வேண்டும். மோசசு, சாக்ரடீசு, கிறித்துநாதர், என்பவர்களுள் அவர் யாரைப் போல்பவர்? புரட்சிக்காரரா? தத்துவஞானியா? தன்னலங் கருதாத் தியாகியா? திட்டமாக அவர் இன்னார்தாம் என்று கூறுவது கடினம்” என்கிறார். தோல்வி நேரத்தில் அவர் மிகத் துன்பப் படுவதையும் அது கடவுள் நோக்கத்தை அறியத் தவறியதன் குறை என்று அவர் எண்ணுவதையும் குறிப்பிடுகிறார். தோல்வி அவரை ஒளித் தூதராக ஊக்கப்படுத்தி விடுவதையும் சுட்டுகிறார்.

காந்தியடிகள் வரலாற்றைச் சத்திய சோதனை வழியே கூறும் கா.சு. திலகரும் காந்தியடிகளும் சந்தித்து உரையாடிய ஒரு குறிப்பைக் குறிக்கிறார்.

66

தாயை மகள் நேசிப்பது போல நீர் இந்தியாவை நேசிக்கிறீர். ஆனால் உண்மையையும் நேசிக்கிறீர். இரண்டில் ஒன்றையே நேசிக்கும் நேரம் வந்தால் நீர் எதைக் கைக் கொள்வீர்?’

“என் மனத்தில் இந்தியாவும் உண்மையும் ஒன்றே. ஆனால் இரண்டில் ஒன்றைக் கைக்கொள்ள வேண்டுமென்றே இடர் ஏற்பட்டால் நான் உண்மையின் பக்கமே சார்வேன்”