பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ் வளம்

14

சன்யாட்சன் ஆகியோர் ஒரே காலத்தில் வாழும் பெருமக்கள். இவருள் கெமால், "ஒரு தலைவருக்கும் பெருந் திரளான மக்களுக்கும் உள்ள ஒற்றுமையால் அடங்கிக் கிடந்த ஆற்றல்கள் வெளிப் பட்டுப் புதுமைகள் செய்கின்றன என்பதை மெய்ப்பிப்பவர் என்றும், காட்டுப் புத்தகம் என்னும் நூலில், ஒரு புலியை மிதித்து உயிர் போக்குவதற்காக உயிரோடு இருக்கிற பனிப் பாறை விழுந்தாற் போல, எருமைக் கூட்டத்தை அதன் மேல் விழும்படி செய்ததைக் கூறுவது போலச் செய்ய வல்லவர் அவர் என்றும் குறிக்கிறார்.

துருக்கி என்னும் ஐரோப்பிய நோயாளியை அவனது சாவுப் படுக்கையில் இருந்து எழுப்பி இளமைக்கும் நலத்துக்கும் உரிய கிளர்ச்சியோடு குதிக்கவும் ஓடவும் - ஆடவும் பாடவும் மகிழ்வோடு கூறவும் செய்ததே அவர் செய்த புதுமையென நயக்கிறார்.

L

பல மனைவியர் மணத்தை ஒதுக்குதல், பெண்கள் பண்டை முறையில் இருந்து தற்கால நிலைக்கு மாற இடந்தருதல், முக்காட்டினை எடுத்துவிடல், தொப்பிக்குப் பதில் துணிக்குல்லா வைத்தல், பொது வாழ்விலும், ஊதியத் தொழில் வாழ்விலும் இடந்தருதல் என்பனவெல்லாம் செய்தார் கெமால். இவ்வளவு வ்வளவு அடிப்படை யான எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு புரட்சியை ஒரு தனி மனிதன் வாழ் நாளுக்குள் எந்நாட்டிலாவது யாராவது யாராவது செய்யக் சய்யக் கூடுமா என்றால் அவ்வாறு செய்தவர் கெமாலே என்கிறார் கா. சு.

பெர்னாட்சாவை மேலைநாட்டுச் சித்தராகக் காண்கிறார் கா. சு. அவர் மரக்கறியூணர். புரூட் என்பவர் சில மக்கள் தங்கள் தாயாரை நேசித்தமையால் அந்நேசம் அவர்கள் வாழ்க்கை முழுவதையும் உருப்படுத்திற்று என்றார். அந்த உண்மையை ஆய்ந்தவருக்குச் ‘சா’ சான்றாளராவார். உழைத்துத் தேடாதமிகை ஊதியமும் கலைநலம் இல்லா வேலையும் அவருக்கு ஒவ்வா; மகளிரைப் பற்றிக் காதற் கருத்துமில்லாத வணக்கமுடையவராக இருந்தார் என்கிறார்.

நன்மையாய் இராதபடி மிகவும் உண்மையாக ருப்பது என்னும் கருத்தைப் படம் பிடித்துக் காட்டிய சாவை, கண்டனக்காரர்கள் நிலத்திலும், நீரிலும் இல்லாத ஒன்றை எழுதிக் காட்டினரென்று கண்டித்தனர் என்னும் கா. சு. கண்டனக்காரர் காலத்துக்கு மிகத் தொலைவான செய்தி இது எனச்

சுட்டுகிறார். உண்மையான

புரட்சி