பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ் வளம்

14

செய்ய வேண்டும்' என்று கேட்பாரே தவிர அதற்கு வரும் விடையைக் கருதாமல் 89 ஆண்டு உழைத்தவர் அவர் என்கிறார் கா. சு. மேலும் 1932 இல் முதலாம் தலைமைப் பதவி முற்றுப் பெற்ற போதே அவர் காலஞ் சென்றிருந்தால் செருமானியருள் அவரே மிகப் பெரியவர் என்ற நிலை, நிலைபெற்றிருக்கும் என்கிறார். ஏனெனில் இரண்டாம் தலைமைப் பதவிக் காலத்தில் அவர் புகழுக்குக் கறைகள் படிந்தன என்கிறார்.

-

இரண்டு தொகுதிகளில் பல்வேறு துறை, பல்வேறு நாடு, பல்வேறு நிலை இவற்றையுடைய - ஆனால், உலகப் புகழ் பெற்ற பெருமக்களை, அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே வரலாற்றுச் செல்வராகக் கண்டு, தமிழ் நிலத்துக்குப் பொருளாக்கி அவ்வழியினைத் தமிழகம் அறிந்து கொள்ளச் செய்த வரலாற்றுத் தொண்டர் கா. சு. என நினைவு கொள்ள வைக்கிறார்.