பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

திருஞானசம்பந்தர், புகலிப்பிள்ளையார், ஆளுடை பிள்ளையார், சண்பை நாடுடைய பிள்ளை, கவுணியர் கோன், கோழிவேந்தர், வெங்குரிவேந்தர், சிவபுரச் செல்வர், தோணிபுரத் தோன்றல், முத்தமிழ் விரகர், வண்டமிழ் நாயகர், ஏழிசைத் தலைவர் இன்னவாறான பெயர்களைப் பெற்ற தகவை விளக்கிக் கூறுகின்றார். அருளிச் செயல்களும் வரலாறும் அடங்கியிருத்தலைக் காட்டுகின்றார் கா. சு. இவ்வாறு விரிந்த திறனாய்வு நூலாகத் திருஞான சம்பந்த சுவாமிகள் வரலாறு விளங்குகின்றது.

று

பெயர்களிலேயே