பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

65

உளமொன்றி நின்றார் ஏயர்கோன் துணைவியார். அதனை நினையும் கா. சு., கணவனை இழந்த பெருந்துயர் வந்த காலத்தும் சிவனடியாரைப் பேணும் கடமை மறவாமை அரியவற்றுளெல்லாம் அரியதோர் செயலாகும் என்கிறார். மேலும், ஒரு தலைவனும், ஒரு தலைவியும் ஒத்த அன்புடையவராய் இல்லறம் நடாத்துங்கால் தலைவனுக்கு இல்லாத சிறப்புக்கள் தலைவி பாலும், தலைவிக்கு இல்லாத சிறப்புக்கள் தலைவன்பாலும் உளவாமாயின் வாழ்க்கை நிறைந்த இன்பம் பயக்கும் என்பது அறிஞர் கொள்கை என்றும் சொல்கிறார் (161).

சுந்தரர் மனையிலே திருவமுதுண்ட சேரமான் பெருமாள் நாயனார், அதன் பின் திருநீறு பூசிக் கொண்டதைச் சுட்டும் ஆய்வுச் செல்வர் கா. கா. சு, சு, உண்டபின் திருநீறணியும் மரபு சேரமான் பெருமாள் செய்கையால் இனிது விளங்கும் என்கிறார் (180). மேலும் பரிகாலத்தின் கீழ்ப்பாவடை (பரவிய விரிப்பு) விரித்தாலும், பகலெனினும் விளக்கேற்றலும்

வழக்காதலைக் கூறுகிறார்.

இறைவன் சுந்தரர்க்குக் காளைப் பருவத்தினராய்த் தோன்றிக் கானப்பேர் தம்மூர் என்றமையால் கானப்பேருக்குக் காளையார் கோயில்' என்ற பெயர் ஏற்பட்டது போலும் எனக் காரணம் காட்டுகிறார் (181)

கணநாதர் தலைவராய் நின்ற நம்பியாரூரர் நிலவுலகிற் புகுந்து இறைவனால் ஆட்கொள்ளப்பட்டபின், ஞானம் பெற்றுச் சிவன் முத்தி நிலையடைந்தனர். கணநாதர் தலைவராய் நின்றே அந்நிலையை அடைதற்குரியார், சிறியதோர் வழுவினால் ஞாலத்திடைத் தோன்றினார். தோன்றிய காரண முற்றுப் பெற்றபின் அவர் தமது பழைய அதிகார நிலையினை அடைந்தனர். அந்நிலையில் இருந்து அவர் பரமுத்தியடைதற்குரியார் என்பது சைவ நூற்கருத்து எனச் சுந்தரர் வரலாற்றை நிறைவிக்கிறார் கா.சு.

தேவார ஆராய்ச்சி என்னும் பகுதி (205-244) ஒரு சிறு தகையது - அதில் சுந்தரர் வரலாற்றுச் சான்றுகள் பலவாகப் பல்கிக் கிடத்தலை முதற்கண் விளக்குகிறார். பின்னர், இறைமை நிலை, அடியார்கள் பேறு, மெய்ப்பொருட் கொள்கை, இயற்கைப் புனைவு இன்னவற்றைப் பற்பல சான்றுகளால் விரிக்கிறார். நூல் நிறைவில் சுந்தர மூர்த்திகளது திருப்பெயர்களை ஆய்கிறார்.

சுந்தரர் தம் கல்விநலம் தெரிவிக்கும் பெயர்கள் (8) ஊரையும், மரபையும் குறிக்கும் பெயர் (4), தவத்தையும், அன்பையும்