பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

113

ஓரிடத்து ஊன்றுகையாகிய 'குத்துகை’யே ‘குத்தகை’யாக வழங்கப்படுகின்றது. குத்தகைக் கால எல்லைக்கு முன்னர் ஒருவரை வெளியேற்றிவிட முடியாதே!

க்

இப்படிக் 'குத்து’ச் சொல் பெருக வழங்குகின்றது. ஆனால், குத்து விளக்கில் குத்துக்கு என்ன பொருள்? அங்கே குத்து' இல்லையே!

ஊர்ப்புறக்கோயில், பெருங்கோயில் ஆகியவற்றில் விளக்குகள் எப்படியுள்ளன என்பதைக் கூர்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.

ஊன்றிய கற்றூணின் உச்சியில் உள்ள குழியில் எண் ணெயும் திரியும் இட்டு எரியும் விளக்காக இருக்கும்; அல்லது, ஊன்றிய கம்பியின் மேல் உள்ள தகட்டுச் சிட்டிகளில் எண்ணெயும் திரியும் இட்டு எரியும் விளக்காக இருக்கும். அவ் விளக்குகள் நிலத்தில் குத்தி வைக்கப் பட்டமையால் குத்து' விளக்கு எனப்பட்டன; பின்னர், வெண்கலம் பித்தளை வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட நிலைவிளக்கு 'குத்துவிளக்கு எனப்பெயர் பெற்றது. தகட்டால் அளவைக்கருவி ஆய பின்னரும் ‘மரங்கால்’ எனவும், தங்கத்தால் காதணி ஆயபின்னரும் 'தோடு' எனவும் வழங்குகின்றன அல்லவா! அவற்றைப் போல் என்க.

குடும்பம் குத்து விளக்கு எனக் கூறும் தமிழகம் வாழ்க்கைத் துணைவியை ‘விளக்கேற்ற வந்தவள் ய விளக்கேற்ற வந்தவள்' என்பது மரபு கருதிய வழக்காம்! சொன்மரபு, வாழ்வியல் மரபு காட்டும் என்பதற்குச் சீரிய எடுத்துக்காட்டு குத்துவிளக்கு என்க.