பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

127

படாப்பாடு படுத்துதல் சவட்டுதல் என்றும், படாப்பாடு படுதல் சவளுதல் என்றும் மேலே கூறிய இருவகை வழக்குகளாலும் அறியலாம்.

நீர், முட்டி மோதி அலைத்துக் குலைத்து அள்ளிவந்து போடப்பெற்ற மண் ‘சவடு' என்று வழங்கப் பெறுவதும், அச்சவட்டு மண், பானை முதலியவை செய்தற்கும். செங்கல் ஆக்குவதற்கும் பயன்படுவதும் யாவரும் அறிந்ததே. சவட்டு மண் கொண்டு மிதித்து நைத்துப் பானை வனைவாரைச் சவளைக் காரர்' என்பதும் வழக்கே. அன்றிப், பஞ்சு நூலைப் பாவில் இட்டு அடித்துப் பசையேற்றித் துணி நெய்வாரைச் சில பகுதிகளில் சவளைக் காரர்’ என்பதும் அறியத் தக்கதே. பொன்னன உரு உருக்கி ஒழுகவிட்டுக் கம்பியாக இழுத்துப் பின்னல் வேலை செய்யும் ஓர் அணிக்குச் ‘சவடி' என்னும் பெயர் வெளிப்படையே.

நெருப்பிலிட்டு ஒன்றை வாட்டச் ‘சவளை’யாகும் - (துவளும்) என்றும், நோயடிப்பட்டு நொய்ந்த பிள்ளை (சவளை) என்றும், சவ்வுச் சவ்வென வளைவதைச் 'சவளல்' என்றும், சவளும் வளாரையுடைய புளிய மரத்தைச் ‘சவள மரம்’ என்றும், மிதிவண்டியைச் சில இடங்களில் 'சவட்டு வண்டி' என்றும், கடலினை அடுத்து முகவாயிற் கிடக்கும் கருங்குறு மணலைச் 'சவளை' என்றும், தோணி செலுத்துங் கோலைச் 'சவளைக் கோல்' (துடுப்பு) என்றும் வழங்கும் வழக்காறுகள் யாவும் நோக்கத் தக்கன.

இனிப் பருத்திக்குப் ‘பன்னல்' என்றொரு பெயர் உண்டு என்பதை இலக்கியவழி அறியலாம்.

'பன்னல்வேலிப் பணைநல் லூரே'

என்பது புறப்பாட்டு (345); பன்னல் வேலி இன்னது என விளக்குவது போலப் ‘பருத்திவேலி' என்றும் புறப்பாடல்கள் (299, 324) கூறும். பன்னல் தரும் பஞ்சியும், நூலும் பனுவல் எனப் பெற்றன. ‘பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாக' என்று ஆடை நூல்போல, ஆய்வு நூலை உருவகித் துரைத்தலும் வழக்காயது.

சவளி என்பது, பன்னல் என்பதுபோல் பருத்திக்குரிய பெயர்களுள் ஒன்று என்பதை. மருத்துவக் கலைச் சொல், விளக்கம் செய்கின்றது. பருத்தி இலையை நைத்து எடுக்கப் பெற்ற சாற்றைச் 'சவளை' என்பதும் மருத்துவ நூலோர் வழக்கே! சவளியாம் பருத்தியினின்று எடுத்த பஞ்சி நூலால் செய்யப்