பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. ‘சுரம்’

ஒருவருக்குக் காய்ச்சல் நோய் வந்தால் அவரிடம் ‘ஜுரம் எப்படி இருக்கிறது?' என்று வினவுவதும், அதற்கு அவர் ஜுரம் இறங்கிவிட்டது' என்றோ 'ஜூரம் இன்னும் வாட்டுகிறது என்றோ மறுமொழி கூறுவதும் நாம் கேட்பனவே.

காய்ச்சல் என்பதுபோலவே ‘சுரம்’ என்பதும் பழந்தமிழ்ச் சொல்லே! எனினும் ஜுரம் என்றே எவரும் சொல்லியும் எழுதியும் வருதலால், அது வடசொல் என்ற முடிவிலேயே தெளிவுடையவரும் அமைந்துவிட்டனர், ‘சுரம்' என்று எழுது பவரையும் அயல் எழுத்தை விலக்கித் தமிழ் இயல்புக்கு ஏற்றவாறு எழுதுபவராகவே எண்ணி, ஒரு புறப்பார்வையோ ஓர் அகப்பார்வையோ பார்க்கின்றனர்.

சுரம் என்னும் செந்தமிழ்ச் சொல், எப்படி வட சொல்லாகக் காட்சி வழங்குகிறது? நம் வீட்டுக் குழந்தைக்கு மாற்றுச் சட்டை மாட்டி, வேற்றுக் கோலம் புனைந்து வேறொருவர் ஏய்த்தது போல, ஓர் எழுத்தை மாற்றி வேற்றெழுத்தைப் புகுத்தியதன் விளைவால் நேர்ந்ததேயாம். இந்த ‘ஜுரம் தமிழ்மொழிக்குச் சுரமாகவல்லவோ

அமைந்துவிட்டது! நோய்ச் சுரத்தை மருந்தால் ஒழிக்கலாம். இந்த ஜுரத்தைத் தெளிந்த அறிவினால் அன்றி ஒழிக்க முடியாதே! ஆயும் அறிவுக்கு, அழுத்தமான திரையும் அல்லவோ வழிவழியாகப் போடப்பெற்று வந்திருக்கிறது!

இடம்

டம்

L

சுரம் என்னும் சொல் தொல்காப்பியத்தில் பெற்றுள்ளது. தொகை நூல்களிலும் மிகுதியாக பெற்றுள்ளது. சுரத்து உய்த்தல், சுரநடை, சுரத்திடை அழுங்கல், சுரத்திடைக் கண்டோர் கூறல் இன்னபல துறைகளை அகத் தொகை நூல்களும் பிற்காலக் கோவை நூல்களும் கூறும்.

சுரம் என்பதற்குப் பழம் பொருள் ‘பாலைநிலம்' என்பதும், பாலைநிலவழி' என்பதுமாம். இச்சுரம் என்பது ‘சுரன்' என வழங்கப்பெறுதலும் வழக்காறே. நலம், நிலம், அறம், வரம் என்பன முறையே, நலன், நிலன், அறன், வரன் என வழங்கப் பெறுதல் போல்வதே அது.