பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

15 இளங்குமரனார் தமிழ்வளம்

‘தென்னுண் தேனின் செஞ்சொல்' என்றார் கல்வியில் பெரியவர். அவரே, 'சொல்லொக்கும் கடிய வேகச் சுடு சரத்தையும், 'சொல்லலங்காரப்' பண்பாகச் செல்லும் அம்புகளையும் புனைந்தார். 'வில்லம்பிற் சொல்லம்பேமேல், என்று அவர் பாடிய தனிப் பாட்டொன்றும் காட்டும்! வள்ளுவரோ, சொல் வல்லாளரைச் ‘சொல் லேருழ' வராகச் சுட்டினார்; உழவு பாடிய கிழவர் அவரல்லரோ!

'சும்மா

-

இரு, சொல்லற” என்பதும், சொல்லால் முழக்கிலோ சுகமில்லை” என்பதும் சொல்லிச் சொல்லித் தழும் பேறியவர்கள். சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு, அமைந்த நிறைநிலை! அதற்கும் கூட, சொல்லே வேண்டி வந்தது! இவை சொல்லின் பெருமை என்பதையன்றி வேறென்ன? அதனால் தான். “சொல்லாத சொல் - மறைச் சொல்” என அகர முதலிகள் சொல்கின்றன.

சொல்லின்வகைகளைச் சொல்லிமுடியாது! "வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்பது சொல்லுக்கும் பொருந்துவதே! சால்லை எண்ணி எப்படிக் கணக்கிட்டுவிட முடியும்? விண்ணக மீனை எண்ணுவது போன்ற முடிவுற்ற வேலையாகவே முடியும்?