பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. 1600

துணி என்பதன் பொருள் தமிழறிந்தார் எவரும் அறிந்தது. நெடிய பாவில் இருந்து துணிக்கப்படுவது துணி, எனப்படுகின்றது. அத்துணியினும் சிறிதாகத் துண்டிக்கப் பட்டது ‘துண்டு எனப்படுகின்றது.

‘துண்டு துணி' என்றோ, ‘துணி துண்டு’ என்றோ வழங்கும் இணைச்சொல் இவற்றின் நெருக்கத்தைக் காட்டும். இங்குத் துணியை மட்டும் காண்போம்.

‘துணி' என்பதன் பொருள் அறிந்தோம். அதன் வழியாக ஏற்பட்ட ஒரு சொல், துணிவு' என்பதாம்.

ஒருவனைத் ‘துணிந்தவன்' என்று சொல்கின்றோம். அவனைத் துணிந்தவன் என்பதற்குக் காரணம் என்ன? பிறர் பிறர்க்கு இல்லாத தனித்தன்மை அவனுக்கு இருத்தலால் அன்றோ துணிந்தவன் என்கிறோம்! துணிவு. துணிந்தவன், துணிவாளன், துணிவாளி, துணுக்கு, துணுக்கை இன்ன வற்றுக்கெல்லாம் ‘துணி' என்பதுதானே, அடிச்சொல்? சால்? இது எப்படிப் பொருளொடு பொருந்துகின்றது?

பெரும்போர் ஒன்றில் ஈடுபட்ட வீரருள் பலரும் நிற்க, ருவன் மட்டும் தனிநின்று வீறுகாட்டி வெற்றிகொள்ளல் துணிச்சலாகப் பாராட்டப்படுகிறது. பரிசு பாராட்டுகள் வழங்கப்படுகின்றன. ஒரு வேளை அவ்வமரில் அவன் உயிர் துறப்பின், அவன் 'அமரன்' எனப் போற்றப்படுகிறான். 'சிறப்பொடு பூசனைக்கு’ உரிமையாளனும் ஆகின்றான்.

ஓரிடத்தில் முறைகேடான செயல் ஒன்று நடக்கின்றது. அல்லது ஒருவர் முறை கேடாகத் தாக்கப்படுகின்றார். அந் நிலையில் அதனைப் பார்க்கின்றவர்களுக்கு அது கொடுமை என்பது புலப்பட்டாலும், அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்னும் உணர்வு இயல்பாக எழுந்தாலும் துணிவாக முன்வந்து தடுக்க முனைவார் அரியர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருப்பவரும் இப்படி நடக்கிறதே என்று வருந்திக்