பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம்

15

துணுக்கின் ‘சுவை’ புலப்படும். இதுகால், துணுக்கு எழுத்தாளர் எனத் தம்மைக் கூறிப் பெருமைப்படுவாரும் உளர். ஆனால் அவர் எழுதுவதே துணுக்குச் செய்திதான். ஒரு பெருநூலில் அல்லது வரலாற்றில் எடுக்கப்பட்ட துணுக்கு அன்று என்பதே வேறு பாடாம்.

‘துணுக்கம்’ ‘துணுக்குறுதல்' என்பன நடுக்கம் என்னும் பொருள் தருவன. அவை ‘துண்’ என்னும் ஒலிக்குறிப்பின் வழியாக வந்தனவாம்.