பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

2. கால்மேல் குறுக்காக இடுங்கால்.

அட்டம் + அணை + கால். அட்டம் குறுக்கு.

அணை = அணைக்கை, தழுவுகை, சேர்க்கை.

3. அட்டகாரு.

173

(ஆங்கிலக் குறிப்பு செ. ப. க. அகரமுதலியில் உள்ளதே) அட் L டணைக்கால் போட்டிரு த்தல் attanai.K. kal - Pottru, செ.கு.வி (vi)

நாற்காலி போன்ற இருக்கைகளில் கால் மேல் காலிட்டு அமைந்திருத்தல்; to sit cross, legged especially on araised seatlike a stool, Chair or bench.

(அட்டம் குறுக்கு அணை அணைக்கை, தழுவுகை, சேர்க்கை. அட்டம் + அணை = அட்டணை)

( ஒரு நாற்காலிமேல் அட்டணைக்கால் போட்டிருத்தல் படமுண்டு)

அட்டம் என்பதற்குக் ‘குறுக்கு’ எனப்பொருளுண்மையை அகரமுதலிகள் மூன்றும் சுட்டுகின்றன. பிறவற்றிலும் உள, 'வட்டத்தில் ஓடச் சொன்னால் அட்டத்தில் பாய்கிறான் என்பது பழமொழி.

அட்டணைக்கால் போடுதல், நட்டணைக்கால் போடுதல் சிற்றூர் வழக்கு. நாற்காலி, மொட்டான் (Stool) சாய்விருக்கை, மிசைப்பலகை இன்னன பயிலாத நாட்டுப்புற மக்கள் ஆடுமாடு மேய்த்தல் வேளாண்மை செய்தல் கூலி வேலை இன்னனவற்றில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய மக்கள் வழக்கு. அங்கே நாற்காலி இருக்கை பெருஞ்செல்வப் பண்ணையார்க்கும் இல்லை; திண்டு உண்டு; திண்ணை உண்டு. கணக்கர் பலகையுண்டு; விஞ்சிப் போனால் ஊஞ்சல் கட்டில் ஊஞ்சல் பலகை என்பவையுண்டு. அவர்களுள் வீற்றிருப்பார் எவர்? வீற்றிருக்கப் பொழுது ஏது? வாய்ப்பும் ஏது?

சம்மணம் கூட்டுதல் அல்லது சப்பணம் கூட்டுதல் அல்லது சபைக்கு இருத்தல் என்பவை ஒருவகை; ஒரு கட்டுக்குள் அமைந்தவை.

உட்கார்தல், குந்துதல் அல்லது குத்தவைத்தல், குத்துக் கால் போட்டிருத்தல், அட்டணைக்கால் போட்டிருத்தல்,