பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

199

எனவும் வழங்கும். களை குத்திபோல் பல் பல்லாகிய முளை களையுடையது அப் பலகு என்பதை அறிபவர், அதன் பெயர்ப் பொருளைத் தெளிவாக அறிவர். பலகடித்தலைப் 'பல்லி யாடுதல்' என்பது பண்டையோர் வழக்கு.

“பூழி மயங்கப் பலவுழுது வித்திப்

பல்லி யாடிய

என்பது புறப்பாட்டு (120). பல்லியாடுதலைத் ‘தாளியடித்தல்’ என்பார் புற நானூற்று உரைகாரர். ஊடடித்தல் என்பது

இக்கால வழக்கு.

பலகு அமைப்பைத் தலை சீவும் சீப்புடன் ஒப்பிட்டு வடிவமைப்புக் காண்க. ‘சீப்புப் பல்' ‘பல்போன சீப்பு' என்னும் வழக்குகளையும் கருதுக. கொழுவொடு சேர்க்கப் பட்டதும் பற்கள் உள்ளதுமான பலகையோடு அமைந்த கலப்பை, 'பல்லுக் கலப்பை' எனப்படுதலையும், செங்கல் கட்டட மேல் தளத்தில் ஒன்றுவிட்டு ஒன்று வெளியே நீட்டி வைக்கப் பெறும் செங்கல் வரிசை ‘பல்லு வரி' எனப்படுதலையும் எண்ணலாம்.

ஈரவெண்காயம், வெள்ளைப் பூண்டு, ஆகிய இவற்றின் பிளவுகள் அல்லது கப்புகள் ‘பற்கள்' என்றே வழக்கில் இன்றும் உள்ளன. பல் பல்லாக எடுத்தே நடவு செய்தலும் கண்கூடானதே. சிற்றூர்ப் பல சரக்குக் கடைகளில் “பூடு ஒரு பல்லுக் கொடுங்கள் என்று கேட்டு வாங்குதல் அண்மைக் காலம் வரை நடை முறையில் இருந்ததேயாம்! இவற்றிலெல்லாம் 'பல்' தன் மூலமாம் ஒளிப் பொருளையும் பன்மைப் பொருளையும் இழந்து ஒருமை’ சுட்டி வந்ததாம்.

‘முப்பழம்', வாழை, மா, பலா என்பவை. இவற்றுள் பலா, ‘சுளை’ எனப்படும், கனியிடை ஏறிய சுளை” என்னும் பாவேந்தர் வாக்கில் வந்த கனி பலாக்கனி என்பது எவரும் அறிந்ததே. பலாக் காட்டையின் வடி வடிவை ஊன்றிக் காண்பார் வண்ணமும் வடிவமும் பல்லொடு ஒத்திருப்பதைக் காண்பர். அதன் பெய ரீட்டையும் அறிந்து கொள்வர் பல் போன்ற கொட்டையுடையதும், இவற்றையும் பலவாகக் கொண்டதும் ‘பலா' எனப்பட்டதாம். பர், பல் பலா என வரல் உண்மையால் அதற்குப் பருமைப் பொருளும் உண்டாம்.

பலாச் சுளை

சுளை என்பது போலவே, 'பருத்திச் சுளை என்பதும் வழக்கே. பருத்தி 'சுளைத் திருக்கிறது' என்பது பருத்தி