பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

203

நச்சினார்க்கினியர். வணிகப் படகுகள் பலவாகச் செல்லுதலும் மீண்டு வருதலும் வழக்கம் என்பதை வரலாற்று வழி அறிந்தோர் ‘பஃறி'யின் மெய்ப் பொருள் தெளிவர். அக்காலச் ‘சாத்துகள்’ வணிகர் கூண்டு வண்டிகள் வரிசையாகச் சென்று வணிகம் செய்து திரும்பிய செய்தியும் ஒப்பிட்டுக் காணத் தக்கதே.

தோல் என்பது 'கிடுகு படை' அல்லது 'பரிசை' எனப் படும். ‘கேடயம்' என்பதும் அது. பல வீரர்களும் ஒருங்கே தோல் பிடித்துப் போர்க்களத்து நிற்றலைப் ‘பஃறோல்' என்பர். அதனை மழை முகிலுக்கு ஒப்பிட்டுக் காட்டுதல் பெருவழக்கு.

'மழை மருள் பஃறோல்"

‘பஃறோல் போலச் சென்மழை”

“மழையென மருளும் பஃறோல்

என்பவற்றைக் காண்க.

99

மலைபடு. 377

– நற். 197

- புறம் 17

பல்லடியாகக் கிளைத்த சொற்கள் இவைதாமோ? இன்னும் பலவாகலாம். அறிஞர்கள் எண்ணுவார்களாக.