பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. பழனி

ஒரு செய்தி : பழனித் திருக்கோயில் மூலவரை வலுப்படுத்த அறிஞர் குழு அமைக்கப்படும்.

L

பூசகர்கள், சிற்பர்கள் கூடி, ‘அடியார்கள் விரும்பிய வண்ணம் பல்வேறு முழுக்காட்டுகள் நடத்துதலால், பழனித் திருக்கோயில் மூலவர் திருவுருவப் படிமம் தேய்மானம் மிக்குளது. இச் சிதைவினின்று காத்தற்குக் குழு அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை எழுப்பினர். குழு அமைக்கப் பட்டது: மூலவர் படிமம் ஆயப்பட்டது; முழுக்காட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

-

-

செய்யத்தக்க செயல் இது. படிவம் கெடாமல் சிதையாமல் போற்றிக் காத்தல், அரசுக்கும் அறங் காவலர்க்கும் பூசகர்க்கும் பிறர்க்கும் கடமையே! இறையடியார்கள் அக்கடைப்பிடியைப் பேணி நடத்தல் முறைமையே! இவ்வாறு, மொழிச் சிதைவை அழிபாட்டை கேட்டைத் தடுக்க அறைகூவல் உண்டா? அறிஞர் அமைப்பு உண்டா? அரசு ஆணை உண்டா? நடை முறைக்கட்டுப்பாடு உண்டா, இல்லை! இல்லை! இல்லவே இல்லையே! ஏன் இந்த ஓரப் பார்வையும், ஒட்டுப் பார்வையும் ஒதுக்குப் பார்வையும்?

-

'பழனி'யைப் பழனி என்பதா? 'பழநி' என்பதா? பழனியைப் ‘பழநி' ஆக்கல் மொழிக்கேடு என்று அறிந்தால்- அதைத் திருத்தியமைக்க அரசு முன்வர வேண்டுமே! அறிஞர்கள் முன்வரவேண்டுமே! அறங்காவலர் முன்வர வேண்டுமே! அடியார்களும், வலியுறுத்தவும் கைக்கொள்ளவும் வேண்டுமே!' 'மொழியா? எக்கேடும் கெடட்டும் என்று விட்டுவிட்டால், இவர்கள் செயல் ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணமும் வைப்பது அன்றி வேறன்றே! செய்தக்க அல்ல செயக்கெடும் என்பதை உணர்பவர், செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்பதையும் உணரவேண்டும் அல்லவோ!

'பழனி' முன்னாள் ஊரா? பின்னாள் ஊரா? மலையூர் என்றால் அதன் பழமையைச் சுட்ட வேண்டியது இல்லையே!