பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

215

‘பழநீ’ என்பது ‘பழநி' ஆய கதை இருக்கட்டும். அப்படி ஒரு சொற்புணர்ச்சி தமிழில் உண்டா? அப்படி ஒரு சொல் லிணைப்பைக் காட்டி, ஊர்ப்பெயரை நாட்ட இயலுமா? கழனி, துழளி உண்டு: அழனம் பழனம் உண்டு; அழன், புழன் உண்டு; எழினி, இழுனி உண்டு, தொழுனையும் உண்டு. ஆனால் ‘பழநி’ப் புணர்ச்சி ஒன்றும் இல்லையாம்.

சங்கநாள் பொதினியைக் கற்பார் ‘பழநி'யைப் பார்க்கும் போது அதன் பழமைச் சீர்மையையும் வரலாற்று மாண்பையும் உணர்வார்! அதனைப் பெயர் மாற்றத்தால் மறைக்க வேண்டுவது என்ன?

நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்றைச் சிலம்பில் படிப்பார், அழகர் மலையில் 'சிலம்பாறு' எனப் பெயரிருக்கக் கண்டால் வரலாறு உணர்ந்து மகிழ்வர் அன்றோ! அதனை ‘நூபுர கங்கை’ என மாற்றி யமைத்த ஏமாற்று ஆற்றுப் பெயருக்கு மட்டுமா ஏமாற்று? தமிழர் வரலாற்றுக்கே ஏமாற்று இல்லையா? வன் கொலையினும் கொலை வரலாற்றுக் கொலையன்றோ?

பழனித் திருப்படிவம் தேய்மானம் இன்றி இருக்க வேண்டாம் என எவ்வளவு தேட்டம் உண்டோ அவ்வளவு தேட்டம், அதன் திருப் பெயர் மாறாதிருக்கவும் வேண்டும் அன்றோ? 'பொதினி' என மாற்றாவிட்டாலும் ‘பழனி' என மாறிய அளவிலாவது பேணவேண்டுமே! திருப்படிவத்தை மாற்றாமல், தேய்மான அளவிலாவது வைத்துப் போற்ற வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லமோ!