பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

“ஏந்துகொடி இறைப்புரிசை”

221

என்பது புறப்பாட்டு (17). “பகைவர் எடுத்த கொடியை உடைய உயர்ந்த மதில்” என்பது இதன் பழையவுரை.

இறையர் என்பதற்கு 'உயர்ந்தவர்’, 'உயர்புகழாளர்' என்பது பொருளாம். திருவள்ளுவமாலையில் ‘அசரீரி’, ‘நாமகள்’ பாடல்களை அடுத்து, உக்கிரப் பெருவழுதியார் முதலிய புலவர்களின் பாடல்களுக்குத் தலைமைப்பாடலாக இறையனார்' பாடல் உண்மை இதனைத் தெளிவிக்கும். அவர் புலவர் தலைவராக இருந்தவர் என்பதையும் தெளிவிக்கும்.