பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. பெருமகன்

பெருமகன், பெருமகள் என்னும் சொற்களின் ‘பெரு'மை நின்றவாறே நிற்க, மகன் மகள் என்பவை ‘மான்’ என்றும், ‘மாள்’ என்றும் திரிதல் உண்டு. அந்நிலையில் ‘பெருமான்' என்றும் 'பெருமாள்' என்றுமாகும்.

பெருமகன் ‘பெருமான்' எனத் திரிதலை வெளிப்பட அறிபவர், பெருமகள் ‘பெருமாள்' என்று திரியும் என்பதை ஏற்கத் தயங்குவர். ஏனெனில், 'பெருமாள்' என்னும் பெயருடைய இறையும், மக்களும் ஆண்களாகவே பெரிதும் இருப்பதால்

என்க.

பெருமகள் ‘பெருமாள்' ஆதலை விளக்குவது போல் 'பெண்பெருமாள்' என்ற பெயருடைய ஒருவரின் விரிந்த செய்திகள் 'விநோத ரச மஞ்சரியில் உண்டு. இன்றும், மகளிர் சிலர் பெருமாள் என்னும் பெயரில் உளர். 'பெருமாளம்மாள்’ என்பார் பெயரில் ‘சரக்குந்து’ ஒன்று ஓடுவதும் கண்கூ

டு.

‘பெருமாள்’ ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுப் பெயராக அமைவது எப்படி என்னும் திகைப்பு அல்லது வியப்பு ஏற்படவே செய்யும். 'பெருமகள்' பெருமாள் ஆயது பெண்பால் வழி. பெரும் ஆள் (நெடிய ஆள்; நெடுமால் பெருமாள் ஆயது ஆண்பால் வழி.

'நீர்செல நிமிர்ந்த மாஅல்' என அளபெடை தந்து பெருமாள் ஆக்குகிறார் நப்பூதனார். (முல்லைப் பாட்டு 3).

பெருமகன், பெருமான் எனத் திரிதலால் ‘மகன்’ ‘மான்' என ஆதல் தெளிவாம். இத்திரிபால் கோமகன் 'கோமான். தளிவாம்.இத்திரிபால் என்றும், திருமகன் ‘திருமான்' என்றும், சீர்மகன் 'சீமான்' என்றும் வேள்மகன் 'வேண்மான்' என்றும், பூமகன், பூமான் என்றும், இன்னவாறு அமைந்து விட்டது. 'வேள் மகள்' 'வேண்மாள்' என்று அமைந்தமை பெண்பால் திரிபுக்குச் சான்று. கோமகள், கோமாள், கோமாட்டி, பெருமாட்டி' என்பன இவ்வழி வந்தவை.