பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

241

எவரும் அறிந்ததே. இப்பெயர்களை ஆழ்ந்து நோக்கினால் சில சிக்கல்கள் உண்டாம். 'தாயைப் 'பெற்றோள்!” என்பது தகும்; தந்தையைப் ‘பெற்றோன்' என்பது தகுமோ என்பது முதலாவதாக எழும் சிக்கல். பெறுதல் என்னும் மூலப்பொருளை ஆய்ந்தால் சிக்கல் தீரும்!

ஒருவன் ஒரு பொருளைத் தந்தால், அவன் தந்தவன் கின்றான். அதனை ஒருவன் பெற்றால் அவன் பெற்றவன் கின்றான். உலகியலில் உள்ள தருதல் பெறுதல் வழக்கத்தை உன்னித்து உணர்ந்தால் உண்மை புலப்படும் ‘தந்தை’ என்னும் பெயர்க்கு உள்ள அடிப்பொருளும் தெளிவாம். மகவைத் தந்தவன்’ தந்தையானான்! அதனைப் பெற்றுக் கொண்டவள் பெற்றோள்' ஆனாள்.

L

ஆனால் தந்தையைப் பெற்றோன் என்பது பொருந்தாதே என்னும் ஐயம் எழும். முந்தை இலக்கண முறையை அறிந்தவர் ஐயுறார்; இலக்கியச் சான்று கண்டு மகிழ்வர்.

தலைவி ஒருத்தியைத் தலைவனிடம் ஒப்படைக்கும் மங்கல விழா ‘மகட்கொடை' எனப் பண்டு வழங்கப்பட்டது. கொடுப் போரும் அடுப்போரும் இருந்து மகட்கொடை நிகழ்த்திய நிகழ்வையும், கொடுப்போர்' இன்றி அயலாரே கொடைநேர்ந்து உதவிய நிகழ்வையும் இலக்கண இலக்கியங்கள் விரிந்த அளவில் சுட்டுகின்றன.மகட்கொடையை ஏற்பவன் என்ன பெயர்பெறுவான்? ‘பெற்றோன்’ ஆவன் அல்லனோ? ஆதலால், தலைவி யொருத்தி 'பெற்றோள்' என்னும் பேற்றைப் பெறுமுன் தலைவனே அத்தலைவியைப் பெற்றுக் கொள்ளுதலால் ‘பெற்றோன் என்னும் பேறு பெற்றுவிட்டான் என்க. இதனை விளக்கு முகத்தான்.

‘பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு

وو

(அகம். 86)

என்று மங்கல மகளிர் மணவிழாவில் வாழ்த்தும் திறத்தை அகப்பாட்டுக் கூறுகின்றது. ஆகலின், தலைவியைப்பெற்றமையால் தலைவன் பெற்றோனாதலும், அத் தலைவன் தருதலால் மகவைப் பெறும் தலைவி ‘பெற்றோள், ஆதலும், இருவரும் இக் கரணியங்களால் இணைந்து பெற்றோர் ஆதலும் விளக்கமாம். மேலும் ஒரு கருத்தும் இணைந்து நோக்கத் தக்கதாம். தாய், மகவை ஈன்று புறந்தருகின்றாள். அதனைப் பெற்றுப் பெரு நிலைப்படுத்துதலில் தந்தையின் பங்கு முதன்மையுடையதாய் முந்து இருந்தது இதனை,