பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இளங்குமரனார் தமிழ்வளம்

15

முன்னரே 'வலி' இலக்கியமாக இருந்தது என்பது விளங்க வில்லையா?

ஆமாம்! இலக்கண ஆட்சி மட்டும் தானா? பொது மக்கள் ஆட்சியில்லையா? பொதுமக்கள் ஆட்சியில் இல்லாததா வலக்கை வலியன், வலியான், வல்லூறு என வழங்கப்பட்டு வருகின்றதே ஒரு பறவை! அது தான், வால் நீண்ட கரிக்குருவி! கரிச்சான்! கரும்பிள்ளை! கரும்புள் என்பன வெல்லாம்!

சிறுத்த கிளியை புறாவைக் காகத்தை மட்டுமல்ல ‘பருத்த பருந்தையும் படுத்தும் பாட்டைப் பார்த்தவர் அதன் வலிமையை அறிவார்! அதன் பெயர்ப் பொருத்தமும் அறிவார்! அதற்குப் பெயர் அதுவேயா வைத்துக் கொண்டது? அதன் இயல்பறிந்து தானே மக்கள் பெயர் வைத்தனர்!

வண்ணத்தில் தோய்ந்தவனிடம் வண்ணம் பட்டது! வலிமையில் தோய்ந்தவனிடம் வலிமை தோய்ந்தது! எண்ணத்தின் சாயல் தானே பெயரீடு;

வல்லாரை ஒரு வகைக் கீரை! சித்த மருத்துவ நூல்களைப் பார்த்தால் வல்லாரைச் சிறப்புப் புலப்படும்!

வல்லியம் புலி - வேங்கைப் புலி! கனவிலே கூட கரிமாவை அச்சுறுத்தி வேங்கை மரத்தையே வேங்கைப் புலியெனத் தாக்க வைக்கும் வல்லியம் அது! சங்க இலக்கியத்தில் எத்தனை சான்றுகள்?

'வலி' உண்டாகி விட்டதா (தலைவலி!)? வரட்டும் வரட்டும்! 'வலி' வந்தால் தானே ‘வலிமை' வரும்!