பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

இளங்குமரனார் தமிழ்வளம்

15

நாட்டில் குடியேறியிருத்தல் வேண்டும் என்றும் இதனால் அதிகையராகிய இவர் அதியர் எனப்படுவாரானார் என்றும் அறிஞர் கருதுகின்றனர்" என்றார் உரை வேந்தர் ஒளவை அவர்கள். முற்படக்கூறியதே ஒளவை கருத்து என்பது வெளிப் படை. ஆயினும் பிறர் கருத்துப் பிறிதொன்றுண்மையைச் சுட்டுவதே அவர் கருத்தாகலின், அக்கருத்து அவர்க்கு இன்மை தெளிவாம்.

அன்றியும் அவர்தம் உரையுள்யாண்டும் அதியமானை ‘அதிகமான்' என்று குறித்தார் அல்லர் என்பது சான்றாம்.

அதிகை என்னும் பாடுபுகழ் ஊர் உண்மையும், அதிகமான் என்னும் பாட வேறுபாடு உண்மையும் போட்ட முடியே அதியமானை அதிகைக்குக் கொண்டு சென்றதாம்; உதியர் உதிகர் ஆகாமைபோல, அதியர் அதிகர், ஆகார்; ஏனெனில் இரண்டும் குடிப்பெயர்கள் ஆகலின், அதியம் விண்ணத்தனார் என்னும் புலவர் (அகம். 301) அதியர் குடியினர் ஆகலின்; இப்பெயர் பெற்றார் என்பது எண்ணத்தக்கது.

இனி, அதியமான் அதிகை சார்ந்தவனாக இருந்

திருப்பனேல் அவன் பேரும் பெற்றியும் சீரும் சிறப்பும் ஊரும் உறவும் பலப்பல பயில விரித்துப் பாடும் புலவர், அதிகையைச் சுட்டாது ஒழியார். மேலும் சேரர், சோழர், பாண்டியர், சாளுக்கியர்; பல்லவர், விசயநகர வேந்தர், நாயக்கமன்னர் என்னப் பல்வேறு கால ஆட்சியர் கல்வெட்டுகளைப் பெற்ற அதிகை, தன் மண்ணுக்குத் தனிப்புகழ் சேர்த்த வள்ளல் அதியனைச் சுட்டாது ஒழியாது. ஆதலால் அதியனுக்கும் அதிகைக்கும் தொடர்பு இல்லையாம்.

பெருக வழங்கும் பாடற் சான்றையும், உரைச் சான்றையும். மொழியியற் சான்றையும் வலுவாக விலக்கிப், பாட வேறு பாட்டையும் பிற்கால மயக்க உன்னிப்பையும் பொருட்டாக்கி அதியனை ‘அதிகன்’ என்று வழங்குவது “பேனைப் பெருமாள்’ ஆக்குவதாம்.