பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

இளங்குமரனார் தமிழ்வளம்

15

காரி மலையமானாட்டின் மன்னன்; அவன் முள்ளூர் மலைக்குரியவன்; அவன் தலைநகர் 'கோவல்' என்னும் திருக் கோவலூர்! அவனொரு குறுநில மன்னன்! மூவேந்தருக்கும் உற்றுழி உதவும் உரவோன்!

அவன், கழல்தொடிக் காரி, கழல்புனை திருந்தடிக் காரி, கழல்தொடி தடக்கைக் காரி, நெடுந்தேர்க் காரி, ஒள்வேல் மலையன், செவ்வேல் மலையன், மாரியீகை மறப்போர் மலையன், தேர்வண்ண மலையன், கோவல் கோமான் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவன்.

காரியின் குதிரை புகழ் வாய்ந்தது. அது கரு நிறமானது. 'காரிக் குதிரை' என்று வழங்கப்பெற்றது. காரிக் குதிரையால் காரியும், காரியால் காரிக் குதிரையும் சான்றோர்களால் பாடும் புகழ் பெற்றனர். ‘காரிக் குதிரைக் காரி!” என்று தன் ஊர்தியால் பெயர் பெற்ற பேற்றாளன் காரி! “காரிக் காளை' என்று இந் நாள் வழங்கப்பெறுவது இல்லையா!

காரி என்னும் பெயர். முள்ளூர் மன்னன், கோவல் கோமான், தேர்வண் மலையனுக்கு எப்படி வாய்த்தது? காரி என்னும் சொல்லின் பொருளையும் இம் மன்னன் தனித் தன்மையையும் அறியின் புலப்படும்!

காரியின் நாட்டைக், கடலும் கொள்ளாதாம்; பகைவரும் பற்றிக் கொள்ள நினையாராம்: அவன் வலிமை அத்தகைத்து

(புறம். 122)

மூவேந்தருள் எவனேனும் ஒருவன், ‘எனக்குப் போர்த் துணையாக வர வேண்டும்' என்று முந்தி வந்து, காரியை வேண்டித் துணையாக்கிக் கொள்வான்

(புறம். 122)

யானையும் அரசும் களத்தில் படப் பகையழிக்கும் வல்லாளன் காரி

(புறம், 26)

வை, காரியின் வீர மாண்புகள். இவை பிறர்க்கும் உரியவை எனலாம். ஆனால் காரியின் ‘தனி வீறு' ஒன்று. அது, வெற்றி பெற்றவனும் புகழ்வானாம் காரியை; தோல்வி யுற்றவனும் புகழ்வானாம் காரியை!