பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

இளங்குமரனார் தமிழ்வளம் 15

“வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம் போனால் கால் நடையாய்ப் போனவர்கள் கனகதண்டி

ஏறுவார்கள்.

என்பது இன்றும் வழங்கும் பழமொழி.

காரிக்குருவி சொகினம் காட்டாது தடுத்தால், எத்தகைய வீரனுக்கும் தோல்வியே ஏற்படும்! அது சொகினம் காட்டின் வெற்றி உறுதியாகக் கிட்டும்! வெற்றிக்கும் தோல்விக்கும் காரிக் குருவியின் குறிப்பே அடிப்படை! அதுபோல் மூவேந்தர் வெற்றிக்கும் தோல்விக்கும் காரியே மூலவன். இக் கருத்தாலேயே கோவற் கோமான் முள்ளூர் மன்னன், தேர்வண் மலையன் ‘காரி’ ஆனான். ஆ

வென்றோர் 'வெலீஇயோன்' எனவும், தோற்றோர் தாலை இயோன் இவன்' எனவும் கூறிக் கூறிப்புகழ் விளக்க மாகிய பின்னர்க் காரிப்பெயர் பெற்றான் என்றும், அப்பெயரே அவன் பெயர்கள் அனைத்தையும் வென்று விளக்கமும் வீறும் கொண்டு இலங்குகின்ற தென்றும் கொள்ளலாம்!