பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

66

இளங்குமரனார் தமிழ்வளம் 15

‘பரந்தோங்கு சிறப்பிற் பாரி”

என வருவன தெளிவித்தல் அறிக.

(புறம். 200)

பரந்து விரிந்த உலகினும், பரந்து விரிந்தது ‘புகழ்’ என்பதை, ‘மண் தேய்த்த புகழ்' என்னும் இளங்கோவடிகள் வாக்காலும் (சிலப். 1. 36) அதற்குப் ‘பூமி சிறுகும்படி வளர்ந்த புகழ்' என்று அரும்பதவுரை யாசிரியரும், “மண்ணைத் தொலைத்த புகழினையுடையான்; புகழ் வளரப் பூமி சிறுகலான் என்று அடியார்க்கு நல்லாரும் வகுக்கும் உரைகளாலும் கண்டுகொள்க. பரவிய புகழுக்கு ஒருவனாகப் பாரி திகழ்ந்தான் என்பதைப், ‘பாரி பாரி யென்றுபல வேத்தி

ஒருவற் புகழ்வார் செந்நாப் புலவர்”

(புறம். 107)

என்று கபிலர் குறிப்பதால் அறிக! பண்டைத் தமிழ் வேந்தரும், புலவர் பெருமக்களும், பொதுமக்களும் தம் மக்களுக்குப் பொருள் நலம் சிறந்த பெயர்களைச் சூட்டித் தமிழ்வாணராகத் திகழ்ந்த சிறப்பை அறிந்து மகிழ்க! அம் முறைமையைப் போற்றி முத்தமிழ் வளர்க்க!

]]