பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

89

வேண்டும்” என்று கோவலன் வாயிலாகக்கூறும் அடிகள், களை பறிப்போர் பறித்து வரப்பிலே போட்ட குவளைப் பூவின் மேல், தளர்ச்சி மிகுதியால் கண்ணகி கால்களை வைத்து விடக்கூடும். அதனால் அப்பூவிலேயுள்ள தேனை எடுக்குமாறு புகுந்த வண்டு இறக்கவும் கூடும் என்று கவுந்தியடிகள் வாயிலாக அருளறங் கூறும் அடிகள் - கோவலன் இறப்புக்குக் “காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன், கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என்று இரங்கும் அடிகள் ஆயிரவர் பொற்கொல்லரைத் தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலி ஊட்டிய கொடுமையைச் சிறிதும் அசைவின்றிக் கூறிச் செல்வாரோ?

-

கூறு

செங்குட்டுவனிடம் கண்ணகியார் வரலாற்றைக் கூறும் சாத்தனாரேனும் உயிர்ப்பலி ஊட்டிய வரலாற்றைக் கின்றாரோ? இல்லை. அவர் கோவலன் கொலையுண்ட உடனேயே சேரநாடு போய்விட்டார் என்று கூறவும் இயல வில்லை. கண்ணகியாரே, கோவலன் இறந்த பதினான்காம் நாள் விண்ணுலகு சென்றார். செல்லுங் காலையில்தான் மலை வேடர்கள் கண்டனர். தற்செயலாக மலைவளங் காண எழுந்த சேர வேந்தனிடம் தாம் கண்ட வியப்புமிக்க நிகழ்ச்சியைக் கூறினர். அதற்கு விளக்கம் தருவதாகத்தான் சாத்தனார் பேசினார். இவையனைத்தும் விரைந்து நடந்தவை என்று கொண்டாலும் இடையீடு படாமல் தொடர்ந்தவை அல்லவாம்! ம துரை யிலே வாழ்ந்த சாத்தனார் இந்நிகழ்ச்சியை அறியாமல் இருந்தார் என்பதும் சால்பில்லை. ஆதலின், உயிர்ப்பலியாகக் கொல்லரையிட்ட நிகழ்ச்சி உண்மையன்றாம். உரைபெறு கட்டுரைக் கூற்றும் பொய்யாம். அடிகள் கருத்துக்கு மாறு பட்ட உரைபெறு கட்டுரை எப்படி அடிகள் எழுதியது ஆகும்?

ர்

சமணரைக் கழுவேற்றிய நிகழ்ச்சி ஒன்று உண்டே! அது போல் இதுவும் நடந்திருக்கக் கூடாதோ- எனின் தென்னாட்டுத் தென்றல் திரு. வி. க சமணரைக் கழுவேற்றியது பற்றி உரைப்பது

காண்க.

66

"தன்மனச் சான்றால் ஒரு மன்னனை மாள்வித்த அறம் வளர்ந்த ஒரு நாட்டில் சமணரைக் கழுவேற்றிய மறம் வளர்ந்த தென்னை என்று சிலர் கருதலாம். சமணரைக் கழுவேற்றிய வரலாற்றிற்குப் போதிய அகச்சான்றாதல், புறச்சான்றாதல் உண்டா என்பது முதலாவது சிந்திக்கத் தக்கது. அச்சான்றுகள் கிடைக்கும் வரை சமணரைக் கழுவேற்றிய வரலாற்றை யான் கொள்ளேன்; கொள்ளேன். தேவாரத்தில் போதிய அகச்