பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

(7-8) செங்குட்டுவனை விளியாக ‘அறக்கோல் வேந்தே' (28 : 96) என்றும், 'செங்கோல் வேந்தே' (28:157) என்றும்,

அடிகளார் கூறியுள்ளமையும், அவன் அவையத்தைச்

'செங்கோல் வேந்தன் திருவிளங்கு அவையம்' (2 : 144) என்று கூறியுள்ளமையும் நோக்குதற்குரியன.

(9) செங்குட்டுவற்கும் இளங்கோவடிகட்கும் உழுவலன்பு பூண்ட முத்தமிழ் ஆசான் சாத்தனார், மணி மேகலை வஞ்சி மாநகர் புக்க காலையில் ஆங்கு ஆட்சி புரிந்தவன்.

"செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்

(26; 77)

என்று குறிக்கின்றார். இவ்வாற்றால் எல்லாம் செங்குட்டுவன் என்பதும், அவன் செங்கோற் குட்டுவன் என்பதும், தெளிவாம்.

இஃதிவ்வாறாக, 'நம் சேரல் பெருந்தகை குட்டுவன் எனத் தனித்தும் வழங்கப்படுவன்; இவனுக்குரிய அடைச் சொல்லாகிய செம்மை இவனது நிறம் பற்றி வழங்கப் பட்டதாகும். இது பற்றியே, மணிக்குட்டுவன் என்றும் இவன் வழங்கப் பெற்றவன் என்று சாசனமொன்றால் தெரிகின்றது எனச் சேரன் செங்குட்டுவன் ஆசிரியர் மு. இராகவர் கூறியுள்ளார். மேலும் நாமக்கல் சாசனத்தில் சேரரின் முன்னோருள் 'மணிக் குட்டுவன்' என்பவனும் ஒருவனாகக் காணப்படுகின்றான் என்றும், அவன் நன்னூல் மயிலைநாதர் உரையில் காட்டப்பெறும் திருமணக் குட்டுவன் ஆகலாம் என்றும், மணக்குட்டுவன் என்று கொள்ளத் தகும் என்றும், அதற்கு மணத் தக்காளி, மணித் தக்காளி என வழங்குவது சான்று என்றும், மணி என்பது ஈண்டுச் செம்மணியான மாணிக்கமாம் என்றும் கூறியுள்ளார். புறச் சான்றுகளைத் தேடிப் படைத்துச் செங்குட்டுவன் பெயர்க்கு ஆக்கி நிறத்திற்கு நிறுவுதலினும் அகச் சான்றுகள் நிரம்பிக் கிடக்கும் நேர்மை அடையைப் புறக்கணிக்க இயலாது என்பதறிக.

·

மணிக்குட்டுவன் அல்லது மணக்குட்டுவனே என்பதைத் தக்க சான்று இன்றிக் கொள்ளுதற்கு இயலாது. அதனையே கொள்ளுவதற்கியலாத போது அவன் நிறத்தைக் கோடல் என்பது சிறிதும் இயலாததாம்.

இனி, 'மணி' என்பது செம்மணி என்று மட்டும் குறிக்கும் என்பதன்று. அது செம்மணியையும் குறிக்கும். கருமணியையும் நீல மணியையும் பச்சை மணியையும் பிற மணிகளையும் குறிக்கும்.