பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ் வளம்

16

66

'எந்நாட்டாள் கொல் யார்மகள் கொல்லோ

நின்னாட் டியங்கண் நினைப்பினும் அறியேம்”

என்று கூறிய வாய்மொழியே சாத்தரைக் கண்களி மயக்கக் காதலர் ஆக்கிற்றாம்.

சாத்தனார் மாபெரும் புலவர் ; மணிமேகலை யாத்த தண்டமிழ் ஆசான். குன்றவர் கூறிய உரையில் நன்றுறத் தோய்ந்து நெஞ்சம் பறி கொடுத்தார். ‘எந்நாட்டாள் கொல்' என்று குன்றவர் வினாவிய வினா அவரை ஆட்கொண்டது. ‘எந்நாட்டாள்?' என்பதில் ஒவ்வொரு நாடும் அடங்கத் தக்கது தானே. சேரநாட்டுக்கு மட்டும் விலக்குண்டா? பருவரல் ஊட்டிய பாண்டி நாடும் சரி, பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகார்ச் சோணாடும் சரி, செழுமலைச் சேர நாடும் சரி 'எந்நாடு' என்பதனுள் அடங்கியே தீரும். இவ்வெண்ணத்தில் இருந்து விடுபடு முன்னரே,

'நின்னாட்டி யாங்கண் நினைப்பினும் அறியேம்’

என்னும் குன்றக்குறவர் உரை சாத்தனார் செவியினிக்கப் பாய்ந்தது.

66

-

அல்லற்பட்டு ஆற்றாது அழுவார் ஆற்றுவாரற்று அலமந்து திரிவார் - உறுப்புச் சிதைந்து உலமருவார் ஒரு தனி வந்து இரங்கி நிற்பார் -இச்சேர நாட்டினராக இருத்தற்கு இயலாது. செங்குட்டுவன் என்னும் செங்கோல் வேந்தன் நாட்டின் எல்லையுள் இத்தகைய அவலம் ஏற்பட்டிருக்க முடியாது” என்று அவர்கள் கருதுவதை உட்கொண்டு - குன்று வாழ் மக்களும் கோல் நிலை உணர்ந்து கூறும் நிலைமையில் செங்குட்டுவன் ஆட்சிச் சீர்மை உண்மையை உட்கொண்டு - சிறக்க எண்ணினார். நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து இன்புற்றார். “செங்குட்டுவன் செங்கோல் மாண்புதான் என்னே! என்னே!” என இறும்பூதெய்தினார். கண்களிப்ப நோக்கி, மையல்மிக்கு, இன்னதென இயம்பவொண்ணா இன்பநிலை யுற்றார். அந்நிலையில் கண்களி மயக்கக் காதலராக விளங்கினார். சாத்தனார் உணர்வை உள்ளவாறு உணர்ந்தவர் இளங்கோவடிகளார். ஆதலால்,

"மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கக் காதலோ டிருந்த தண்டமிழ் ஆசான் சாத்தன்”

என்றார்.