பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

111

ச்சொற்றொடரின் ஆழம் எண்ணி எண்ணி இன்புறற் பாலதாம். கண்ணகியாரை முற்படக்கூறிய காரணம் தெளிவாயிற்று. இனித் திங்களை முற்கூறியது ஏன் எனக் காண்போம்.

கோவல கண்ணகியர். “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை” அமர்ந்திருந்தனர். இதனை தனை உவமைமுகத்தான் அடிகள் “கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல" இருந்தனர் என்றார். ஞாயிறும் திங்களும் ஒன்று பட்டு இருந்தது போன்று கோவல கண்ணகியர் இருந்தனர் என்றாராம். இதுகொண்டு ஆடவர் பெண்டிரைக் கதிருடன் ஒப்பிட்டுக் கூறும் வழக் குண்மையினை அறியலாம்.

66

அஞ்சுடர் நீள் வாள் முகத்தாயிழையும் மாறிலா வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் -டஞ்சி ஒருசுடரு மின்றி உகுலபா ழாக

இரு சுடரும் போந்ததென் றார்"

என்னும் இத்திணை மாலைப் பாட்டு.

செல்வதைக்

தலைவனும் தலைவியும் காட்டுவழிச் கண்டவர்கள் அவர்களைத் தேடிக் கொண்டு வரும் செவிலித் தாய்க்கு உரைப்பதாக அமைந்ததாம். "உலகு பாழாகுமாறு ருசுடரும் போந்தது போல்வது தலைவன் தலைவியர் ஆகிய இருவர் உடன் போக்கும்" என்றார்கள். இதில் தலைவன் தலைவியர் சுடர்கட்கு ஒப்பிடப்பட்டுள்ளதை அறியலாம்.

உதயணன் வாசவதத்தையுடன் கூடி நின்ற நிலைமையை வருணிக்கும் கொங்கு வேளிர்,

"மதியமும் ஞாயிறும் கதிதிரிந்தோடிக் கடனிற வானில் உடனின்றாங்கு”

66

என்றும், தலைவனும் தலைவியும் தலைப்பட்ட நிலைமையை றையனார் களவில் உரைகாரர் 'வெங்கதிர்க்கனலியும் தண்கதிர் மதியமும் தம்கதி வழுவித் தலைப்பெய்தாற் போன்று என்றும் கூறினர். இவற்றால் தலைவன் தலைவியரைச் சுட சு ரொடும் ஒப்பிட்டுக்கூறுவது பரவலான ஒரு வழக்கம் என அறியலாம். அவ்வழக்கைக் கொண்டே அடிகள், கண்ணகி கோவலர் திருமணம் கூறும் மங்கல வாழ்த்திலே இரு கதிர்களையும் குறிப்பிட்டு வாழ்த்தினார். இரு சுடர்கட்கும் இணையாயவர்கள் தலைவி தலைவர் ஆதலால் என்க.