பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

“இசையோன் பாடிய இசையின் இயற்கை

வந்தது வளர்த்து வருவதொற்றி”

125

என்பன அரங்கேற்று காதை 64, 65 ஆம் அடிகள். இதில் 65 ஆம் அடியில் வரும் “வந்தது வளர்த்து” என்பதற்கு அரும்பத உரை "பாடுகின்ற பண்களுக்குச் சுரம் குறைவு படாமல் நிறுத்தி என்பது வளர்த்து என்பதற்குக் 'குறைவு படாமல்' எனப்பொருள் காணப்பட்டது என அறியலாம். இதன் அடியார்க்கு நல்லாருரையும் குறைவுபடாமை” என்பதே.

66

6T.

ஆ.

கி.

இன் கையெழுத்துப்படியில் 'வளர்த்து' என்பதற்கு ‘வழாஅது' எனப்பாடம் உள்ளது. இப்பாடமே உரைக்குத் தகப் பொருத்தி நிற்றல் வெளிப்படை. “உரையால் மூலத்தின் பாடம் திருந்தும்” என்பதற்கு இத்தகு பாடங்கள் சான்றாம்.

அதே அரங்கேற்றுக் காதையின் 97 ஆம் அடி. "புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை”

என்பது “பொதியில் வரை முதலான புண்ணிய நெடுவரைப் பக்கங்களில் நெடிதாகி உயர வளர்ந்த மூங்கில்” என்பது அரும் பதவுரை. இதே பொருளையே அடியார்க்கு நல்லாரும் வரைந்தார். ‘போகிய நெடுங்கழை' என்பதற்கு “நெடிதாகி உயர வளர்ந்த மூங்கில்" என்பதில் உயர்தல் பொருளுக்கு ஏற்ற சொல்லின்றி இடரொடும் இயைத்துக் கொள்ள நேர்தல் தெளிவு. இதன் பாடம் எ. ஆ. கி. கைப்படியில்,

‘புண்ணிய நெடுவரைப் போகுயர் நெடுங்கழை”

என்றுள்ளது. இதன் பொருத்தம் தெளிவு.

“பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த சீரியல் வெண்குடை’

என்பதும் அரங்கேற்று காதையே (114 . .5)

"பெரிய கீர்த்தியையுடைய அரசர் பொருதுடைந்து புறங்கொடுத்த வழிப்பறிக்கப்பட்ட அழகிய நற்கொற்றக் குடை என்பது இதன் அரும் பதவுரை.

66

"பெரிய புகழையுடைய அரசர் பொருதுடைந்து புறங் கொடுத்த வழிப் பெற்ற அழகிய கொற்ற வெண்குடை” என்பது அடியார்க்கு நல்லாருரை.