பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

பத்திரம் வாங்கித் தான்முன் நினைந்த அப்பரிசே செய்ய”

157

என்றார் (பத்திரம் -வாள்; நினைந்த அப்பரிசே - நினைந்த அவ்விதமே). இவ்வாறே ஏனாதி நாத நாயனாரொடு மாறு பட்டு நின்ற அதிசூரன் அவரைக் ரைக் களத்தில், வாளால் வெட்டினான். அதனை அவ்வாறே கூறல் சாலாது எனக் கொண்ட சேக்கிழார்,

66

"முன்னின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்"

என்ற அளவில் அமைந்தார்.

-

இனிக் கம்பர் போற்றும் நாகரிக உரைகள் எண்ணற்றன. அவற்றுள் ஒன்றை மட்டும் ம் காண்போம்; மந்தரையின் தூண்டலால் கைகேயி இராமனைக் காட்டுக்கு அனுப்ப உறுதி கொண்டாள். படுக்கையை விடுத்து வெறு நிலத்து உருண்டாள்; இராமன் முடிசூட்டுச் செய்தியை உரைப்பதற்காக அவள் மாளிகையை நாடி வந்த தயரதன் மருண்டான்; மயங்கினான்; "தேனே, மானே" என்று தேற்றினான். அவள் அ அவன் எதிர் பார்த்திராத செய்தியை இராமன் காடாளவும், பரதன் நாடாளவும் ஆன செய்தியை உரைத்தாள். "வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்”; “ஊதுலையிற் கனலென்ன வெய் துயிர்த்தான்”; அரசர்கள் மணிமுடிகள் எல்லாம் தன் அடிகளில் கிடக்கக் கண்டு களித்த வேந்தன், கவலைக் கடலில் ஆழ்ந்து தேறிக் கைகேயியினிடம் வரம் வேண்டிக் கிடக்கிறான். “உன் மகனுக்கு நாட்டைத் தருவேன் டத் தருவேன்” என உறுதி உறுதி மொழிந்தான். ஆனால் இராமனைக் காட்டுக்கு விடுத்தல் மட்டும் வேண்டாவாம்;

ராமனைக் காட்டுக்கு அனுப்பாதே' என்று சொல்ல வாய் வரவில்லை. “என் கண் வேண்டுமா? அதைத் தருதற்குக் கடமைப்பட்டவன் நான்; உயிர் வேண்டுமா? உடனே தருவேன்; பெண்ணிற் சிறந்தவளே; கேகயன் மகளே; மண்ணுலகையெல்லாம் கொள்க, ஆனால் மற்றது ஒன்றை மட்டும் மறந்துவிடு” என்று கெஞ்சுகின்றான். இதனைக் கம்பர்,

66

'கண்ணே வேண்டும் எனினும் ஈயக்கடவேன்என்

உண்ணேர் ஆவி வேண்டினும் இன்னே யுனதன்றோ பெண்ணே வண்மைக் கைகயன்மானே பெறுவாயேல் மண்ணே கொண்ணீ மற்றைய தொன்றும் மறவென்றான்”

என்கிறார்.