பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

-

169

உணர்வற்ற கங்குலின் மீது ஏற்றுகின்றான் பாவலன் தான் காணும் உணர்ச்சிப் பெருக்கை. கல்லும் கவி சொல்லும், கவிஞன் வாய்பட்டால். கங்குலும் பேசும், அவன் கலையுணர்வில் நிற்கும் போது. தம்வாயால் அன்று - கவிஞனின் வாயால்! இரவு இயல்பாகக் கழிவதைக், ‘கைகேயி செய்த கொடுமையைத் தாங்க மாட்டாமல் புறப்பட்டதாகக்' காட்டி விடுகின்றான். அந்த இன்ப வெள்ளத்திலே நம்மையும் மூழ்கி மூழ்கி மகிழவும் செய்து விடுகின்றான்.

"சேணுலாவிய நாளெலாமுயிர் ஒன்றுபோல்வன செய்துபின் ஏணுலாவிய தோளினானிடர் எய்தவுமொன்றும் இரங்கலா வாணிலாநகை மாதராள்செயல் கண்டுமைந்தர் முனிற்கவும் நாணினாளென ஏகினாள்நளிர் கங்குல் ஆகிய நங்கையே.’’

5. அக இலக்கியங்களில் தோழி

தோழன் தோழி என்னும் சொற்கள் இந்நாளில் புதுமைப் பொலிவோடு விளங்குகின்றன. ஆனால், வை வ அகப் பொருள் இலக்கண இலக்கியங்களில் மிகப் பழகிப் போன சொற்களாகும்.

தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே வருகிறது. ஆனால் தோழி என்பதோ 550 இடங்களில் வருகிறது. இதுவே, இலக்கியத்தில் தோழிக்கு உரிய சிறந்த இடத்தை விளக்கும்.

66

அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர். ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலரே; பாங்கன் ஒரு துறை அளவில் வந்து போய் விடுகிறான்; பாணன் சில பொழுது வருகிறான்; தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இ மில்லை; தலைவனது தந்தை உடன்பிறந்தார் பற்றி ஒன்றும் சொல்லலாகாது; தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவர் அல்லர்; கற்பியலில் வரும் மழலை மகன் ளந்தூதுவனே அன்றி உரையாடான்; தோழியும், செவிலியும், அன்னையும், பரத்தையும் அக இலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரிது” என்கிறது தமிழ்க்காதல். மேலும், “சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 842 பாடல்கள் தோழியிற் கூட்டம் என்னும் ஒரு துறைக்கே வருவன. இதனால் அக இலக்கியத்திற்குத் தோழி என்னும் ஆள்