பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

231

பரிபாடல் ஆசிரிய நிலையினும், வெண்பா நிலையினும் முடிதல் இலக்கிய வழி அறிந்ததாம். முழுமையாகக் கையில் கிடைத்துள்ள 23 பரிபாடல்களில் 18 பாக்கள் அகவல் முடிவும், 5 பாக்கள் வெண்பா முடிவும் பெற்றுள. அகவல் முடிவு பெற்றன அனைத்தும் ஏகார இறுதி பெற்ற மாச்சீர்களேயாம்.

66

அம்மை முதலிய வனப்பு வகை எட்டனுள் இயைபு என்ப தொன்று. இதனை ஞகாரை முதலா னகாரை ஈற்றுப், புள்ளி இறுதி இயைபெனப் படுமே" (தொல். செய். 240) என்பார் தொல்காப்பியர். “ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை ஈறாக அமைத்துச் செய்யுளைப் பொருட்டொடராகவும், சொற்றொடராகவும் செய்வது இயையெனப்படும்" என்று பேராசிரியம் இதனை விளக்குகிறது.

66

அகவல் இசையன அகவல் மற்றவை, ஏஓஈஆய் என் ஐ என்றிறுமே" என்று யாப்பருங்கல விருத்தி நூற்பாவும், “அகவல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடைய நான்கு ஆசிரியப்பாவும் ஏ என்றும், ஓ என்றும், ஆய் என்றும், என் என்றும் இறும்” என்னும் அதன் விருத்தியுரையும் நோக்குதற்குரியன.

6

இவ்வியைபு இலக்கணத்திற்குச் சான்றாக மணிமேகலையும் பெருங்கதையும் திகழ்கின்றன. மணிமேகலையில் 30 காதைகளும் பெருங்கதையில் இன்று கிடைத்துள்ள 99 காதைகளும் இவ் யைபு இலக்கணம் அமைந்தனவே. இவையனைத்தும் ‘என்’ என ‘னகரப்' 'புள்ளியில் முடிந்தவை. சிலம்பில் 19 காதைகள் ‘என்' என முடிந்தன. எஞ்சியவை வரிப் பாடல்களும் பிறவுமாம். ங்கெல்லாம் வரும் இயைபுகள் அனைத்தும் மாச்சீரான் அன்றி வேறு சீர்களான் வந்தில.

'என்' என்பதும் ‘ஆய்' என்பதும் அகவல் ஈறாதற்குரியன என்பதை இலக்கிய இலக்கணச் சான்றுகளால் அறிவது போல் கர ஈற்றுமாச் சீரால் முடிவனவற்றை இலக்கண வழியே அறியக் கூடவில்லை. கலித்தொகையில் இகர ஈற்றுமாச்சீர் வந்துள்ளமையை அறிந்தோம். இஃதருகிய வழக்குப் போலும். இவ்வருகிய வழக்கு இடைக் காலத்தே சற்றே பெருகவும் பிற் காலத்தே மாறி மயங்கவும், இக்காலத்தே அகவலை எப்படியும் முடிக்கலாம் என்னும் துணிவால் விளச்சீர்களே அன்றி விளங்காய், விளங்கனிச் சீர்களும் வந்து முடியப் பாடுவதும் கண்கூடு.

இங்குக் குறிக்கப் பெற்றவற்றால் தேமா புளிமா என்னும், மாச்சீரே அகவலின் ஈற்றுச் சீராய்ச் சான்றோர்களால்