பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

தந்நிலை விளக்கம் :

239

அடிகளார் அருளுள்ளம் பற்றி முன்னேர அறிந்தோம். அவர் தந்நிலை விளக்கமாக ஆங்கிலியர் அந்தாதியாம் இந் நூலில் குறிப்பன அவர் தம் வரலாற்றின் அகச்சான்றுகளாம் அருமை வாய்ந்தன:

வேள்விக்கு இரங்கல் :

புலைக் கொலைக்காக ஆங்கிலியர்கள் அழியப் பாடும் அடிகள், வேள்வியில் நிகழும் கொலையைப் பற்றி என்ன கருதுகிறார்? கொலை வேள்வியை எள்ளத்தனையும் விரும்புவ தன்றாம் அவருள்ளம்! கொலைவேள்வியை நினைந்த அளவானே புலம்புதல் உண்டாகின்றதாம் :

“அவியென்று வேள்வியில் ஊன்பெய்கின் றாரும் அதுதவிர்சீர் புவியின்கண் ஓங்கிடச் செய்வது நாடிப் புலம்பும் என்சொல்”

என்கிறார் (88). வேள்விப்பலி என்று தெருட்டுவார் உண்டெனினும், வெங்கொலைப்பலி என்பது பொய்த்து விடுமா? தெய்வப் பெயர் சொல்லி விட்டால், கொலை, கொலை யாகாதா? கொலையாகாது என்றால், எவரையும் இறைவன் பெயரால் கொன்றால் குற்றமாகாதே!

சமயச் சால்பு :

அடிகளார்க்குத் ‘தண்டபாணி' என்பது பெயர். அவர் திருமுருகன் அடியாராகவே இருந்ததாலும் தண்டபாணி (தண்டேந்தி)யாக இருந்ததாலும் அப்பெயர் பெற்றார். முருகதாசர் என்பதும் அவர் பெயரே; புலவூண் கொள்ளாத சிவநெறிக் குடியில் தோன்றியவர். எனினும் ‘சமயச் சால்பில்’ சிறந்து நின்றவர். கொள்கைச் சமயமே சமயமாகக் கொண்டவர். அதனால்,

“பொய்ம்மத வாதப் புலயருக் கஞ்சிப் புழுங்குகின்றேன்

99

எம்மதமேனும்கொன் றுண்ணாத தாகில் எனக்கினிதே' (50)

என்று பாடுகிறார். 'கொன்றுண்ணாச் சமயமே என் சமயம்' என்கின்றார் அல்லரோ! அவர்தம் அருட்கொள்கையே சமயக் கொள்கை என்க.