பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

243

ஓட்டவும் புறப்படுகின்றாரே! பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆங்கிலவரை எதிர்த்து ஒரு நூலே பாடினாரே! இத்தகைய ஆங்கில எதிர்ப்பு நூலுள், இதற்கு முற்பட்டது தமிழில் உண்டோ? இந்திய மொழிகளில் உண்டோ?

அடிகளார் மன்றாடி மன்றாடி இறைவனிடம் வேண்டிக் காண்ட ஒரு மகனார் காந்தியடிகள் தாமோ? அவர்தம் வேட்கையெல்லாம் ஓருருவாகத் தோன்றிய வீறுமிக்க துறவி விவேகானந்த அடிகள் தாமோ? தண்டபாணியார் அழுதும் அரற்றியும், உருகியும், உறைந்தும் பாடிய பாடல்களுக்கு ஆற்றல் ல்லாமல் ஒழியுமோ? தந்நலம் உண்டாயினன்றோ தோல்வி? அணுவுயிர்க்கும் அருள் நாடும் பெருந்தகை நாட்டத்திற்கு வெற்றியன்றி வேறொன்று உண்டோ?

19. சொல்லும் சுவையும்

'சொல்' என்பது பலபொருள் ஒருசொல். அதற்குரிய பல பொருள்களுள் 'நெல்'என்பதும் ஒன்றாகும்.

சொல்லும் நெல்லும்

மணிபிடியாப் ‘பதர்' அல்லது ‘பதடியை' எவரும் 'நெல்' என்னார்; மணி திரளாத அரைக்காயை ‘நெல்' என்னார்; மணி சிறிது திரண்டு சிறுத்துக் கறுத்த கருக்காயை ‘நெல்' என்னார். நெல்லே சொல்லின் பொருளை உவமை வகையால் விளக்க வல்லதாம். பொருளிலாச் சொல் எதுவும் தமிழில் இல்லை. அதனால், எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

66

பதரும் பதடியும்

பயனிலாச் சொல்லைச் சொல்வானையும், அதனைக் கேட்பானையும், அதனை நன்றென நயப்பானையும் ஒருங்கே 'பதடி' எனச் சுட்டினார் பொய்யா மொழியார். பயனிலாது கழிந்த ஒரு பொழுதைப் 'பதடிவைகல்' என்றார் சங்கச் சான்றோர் ஒருவர். அவர் பெயரையே ‘பதடி வைகலார்' எனப் போற்றிக் கொண்டது பழந்தமிழ் உலகம்.

சொல்லின் ஆட்சி

பொது மக்கள் வழக்கில் சொல்லின் ஆட்சி எத்தனையோ வகைகளில் வழங்குகின்றது.